/உள்ளூர் செய்திகள்/கரூர்/உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் கரூருக்கு வளர்ச்சி பணிகள்உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் கரூருக்கு வளர்ச்சி பணிகள்
உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் கரூருக்கு வளர்ச்சி பணிகள்
உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் கரூருக்கு வளர்ச்சி பணிகள்
உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் கரூருக்கு வளர்ச்சி பணிகள்
ADDED : அக் 03, 2011 03:19 AM
கரூர்: 'உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு கரூருக்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்படும்' என போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கரூர் கொங்கு திருமண மண்டப்பத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: கடந்த ஐந்தாண்டுகளில் மாநிலத்தில் தி.மு.க., வும், கரூர் நகராட்சியில் தி.மு.க., வை சேர்ந்தவர்கள் தலைவராக இருந்தும் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை.
குறிப்பாக குடிநீர் தொடர்பான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது.கடந்த 1991-1996 ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது கரூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்தது. அதன் பிறகு ஆட்சியில் கரூர் மாவட்டம் கண்டுகொள்ளப்படவில்லை.
கரூர் பசுபதிபாளையம் பகுதியில் அமராவதி ஆற்றுப்பாலத்தின் மீது உள்ள பாலம் கடந்த தி.மு.க., ஆட்சியில் மூடப்பட்டது. அதன் பிறகு தி.மு.க., ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை. உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் 12 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் கரூர் நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்க உள்ளார். குறிப்பாக பெரியகுளத்துப்பாளையம் மற்றும் பசுபதிபாளையத்தில் குகை வழிச்சாலை, கரூர் நகரை சுற்றி ரிங் ரோடு அமைக்கும் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த மூன்று மாதங்களில் அ.தி.மு.க., அரசு செய்த சாதனைகளை சொல்லி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு கேட்க வேண்டும். அ.தி.மு.க., தலைமை அறிவித்துள்ள வேட்பாளர்களை எதிர்த்து, எதிர் முகாமுக்கு உதவி செய்கிறவர்கள் குறித்து கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எம்.பி., தம்பிதுரை, எம்.எல்.ஏ., காமராஜ், கரூர் நகராட்சி தலைவருக்கான வேட்பாளர் செல்வராஜ், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செந்தில் நாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஷாகுல் அமீது, தொகுதி செயலாளர் திருவிகா, நகர செயலாளர்கள் தாரணி சரவணன், நெடுஞ்செழியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


