/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/உளுந்தாண்டார்கோவிலில் இன்று கும்பாபிஷேகம்உளுந்தாண்டார்கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
உளுந்தாண்டார்கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
உளுந்தாண்டார்கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
உளுந்தாண்டார்கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 14, 2011 12:11 AM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அடுத்த உளுந்தாண்டார்கோவில் கங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், மாலை 5 மணிக்கு முதற்கால பூஜை நடந்தது. இன்று அதிகாலை இரண்டாம் கால பூஜை, நாடிசந்தானம், திரவியாகுதி, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, கலச புறப்பாடும் நடக்கிறது. காலை 8 மணிக்கு மேல் 8.30 மணிக்கு கங்கையம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபி@ஷகம் நடக்கிறது. இரவு முத்து பல்லக்கில் அம்மன் வீதியுலா நடக்கிறது.


