/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஓப்பன் பாராக மாறிய கோவில் வளாகம் "குடி'மகன் தொல்லையால் பக்தர் அவதிஓப்பன் பாராக மாறிய கோவில் வளாகம் "குடி'மகன் தொல்லையால் பக்தர் அவதி
ஓப்பன் பாராக மாறிய கோவில் வளாகம் "குடி'மகன் தொல்லையால் பக்தர் அவதி
ஓப்பன் பாராக மாறிய கோவில் வளாகம் "குடி'மகன் தொல்லையால் பக்தர் அவதி
ஓப்பன் பாராக மாறிய கோவில் வளாகம் "குடி'மகன் தொல்லையால் பக்தர் அவதி
ADDED : ஜூலை 14, 2011 01:39 AM
பனமரத்துப்பட்டி : குரால்நத்தம் பிடாரி அம்மன் கோவில் வளாகத்தில், கறி விருந்து நடக்கும் நாட்களில் ஓப்பன் பாராக மாறிவிடுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவஸ்தைக்கு ஆளாகின்றனர்.
பனமரத்துப்பட்டி அடுத்த குரால்நத்தம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், தங்களின் கோரிக்கை நிறைவேற வேண்டுதல் வைத்துச் செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பிறகு, பிடாரி அம்மனுக்கு கிடா, கோழி பலியிட்டு, விருந்து வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதனால், ஞாயிற்றுகிழமை தோறும், பிடாரி அம்மன் கோவில் வளாகத்தில், கறி விருந்து நடக்கும். கறி விருந்தில் பங்கேற்க கார், டூவீலரில் வருபவர்கள், மது பாட்டில் வாங்கி வந்து, கோவில் வளாகத்திலேயே அமர்ந்து அருந்துகின்றனர். அதனால், கோவிலுக்கு வரும் பெண்கள், குழந்தைகள் முகம் சுளித்துச் செல்கின்றனர். போதை தலைக்கு ஏறிய 'குடி'மகன்கள், கார், டூவீலரை எடுத்துக்கொண்டு அசுர வேகத்தில் செல்கின்றனர். பனமரத்துப்பட்டியில் இருந்து கம்மாளப்பட்டி வரை உள்ள ரோடுகளில், ஆபத்தான வளைவுகள் உள்ளன. மது போதையில் அசுர வேகத்தில் செல்லும் 'குடி' மகன்கள், இதுபோன்ற வளையில் எதிரே வரும் வாகனங்கள் மீது மோதுவதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், மஞ்சமெத்தை அருகே மது போதையில் டூவீலரில் வந்த இருவர், வளையில் வந்த லாரியில் மோதி ஒருவர் பலியானார். நேற்று முன்தினம் பிடாரி அம்மன் கோவில் கறி விருந்தில் பங்கேற்று மது அருந்திய இருவர், டூவீலரில் புறப்பட்டனர். பெரியூர்கல்மேடு ரோடு வளைவில் வந்தபோது, போதை ஆசாமிகள் வந்த டூவீலர், தனியார் டவுன் பஸ் மீது நேருக்கு நேர் மோதியதில், இருவர் படுகாயம் அடைந்தனர். மது போதையில் டூவீலரில் வலம் வரும் 'குடி'மகன்களால் விபத்துகள் அதிகரிப்பதோடு, பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே, போதையுடன் வாகனங்களில் பறக்கும் 'குடி'மகன்கள் மீது, போலீஸார் வழக்கு பதிவு செய்து, விபத்துக்களை தடுக்க வேண்டும்.


