ADDED : ஜூலை 14, 2011 11:40 PM
திண்டுக்கல் : போலீஸ் பணிகளில், மாணவர்கள், நண்பர்கள் குழுவின் உதவியை அதிகரிக்கும் வகையில் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மாவட்ட போலீஸ் நண்பர்கள் குழு சார்பில், ஜூலை 22, 23, 24ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போலீசார், மாணவர்கள் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் பங்கேற்க உள்ளனர். இதில் உள்ளூர் பிரச்னைகளை அணுகும் முறை, அவற்றைத் தீர்ப்பதில் போலீசாரின் ஒத்துழைப்பு, சேவை மனப்பான்மையுடன் செயல்படும் விதம், அவசியம், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கையாளுவதில் உதவும் வழிகள், குற்றச் செயல்களை குறைப்பதற்காக செய்ய வேண்டிய, தவிர்க்க வேண்டிய செயல்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கப்பட உள்ளது.


