/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பொய் கணக்கு எழுதி மோசடி வங்கி செயலருக்கு 4 ஆண்டு சிறைபொய் கணக்கு எழுதி மோசடி வங்கி செயலருக்கு 4 ஆண்டு சிறை
பொய் கணக்கு எழுதி மோசடி வங்கி செயலருக்கு 4 ஆண்டு சிறை
பொய் கணக்கு எழுதி மோசடி வங்கி செயலருக்கு 4 ஆண்டு சிறை
பொய் கணக்கு எழுதி மோசடி வங்கி செயலருக்கு 4 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 15, 2011 12:59 AM
விழுப்புரம் : கூட்டுறவு வங்கியில் பொய் கணக்கு எழுதி மோசடி செய்த செயலாளருக்கு விழுப்புரம் கோர்ட்டில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் அப்துல் சுபான்(47). இவர் கஸ்பாகாரனை கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் செயலாளராக கடந்த 1973ம் ஆண்டு முதல் 91ம் ஆண்டு வரை பணி புரிந்தார். இவரது பணி காலத்தில் அந்த வங்கியின் உறுப்பினர்கள் ரங்கநாதன், ராமசாமி, தெய்வசிகாமணி, நாகமுத்து, சம்பத், பட்டாபி, செம்மனேரி, மணி, அர்ஜூனன், கண்ணன், பழனி ஆகியோரது தொகை 83 ஆயிரத்து 298 ரூபாயை வங்கி ரொக்க புத்தகத்தில் இருப்பு காட்டாமல் இருந்து வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் வணிக குற்றப்புலனாய்வு துறை போலீசார் அப்துல்சுபான் வைத்திருந்த வங்கி ரொக்க புத்தகத்தை ஆய்வு செய்தனர். இதில் பொய் கணக்கு எழுதியிருந்ததை கண்டறிந்து அவரை கைது செய்தனர். விழுப்புரம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்துல்சுபானுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதர் நேற்று தீர்ப்பளித்தார்.


