/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாணவர்கள் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு தபால்தலை சேகரிப்பு உதவுகிறது: கலெக்டர்மாணவர்கள் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு தபால்தலை சேகரிப்பு உதவுகிறது: கலெக்டர்
மாணவர்கள் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு தபால்தலை சேகரிப்பு உதவுகிறது: கலெக்டர்
மாணவர்கள் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு தபால்தலை சேகரிப்பு உதவுகிறது: கலெக்டர்
மாணவர்கள் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு தபால்தலை சேகரிப்பு உதவுகிறது: கலெக்டர்
திருச்செங்கோடு: ''வரலாற்றை அறிந்த கொள்ள தபால் தலை சேகரிப்பு மாணவர்களுக்கு உதவுகிறது,'' என, கலெக்டர் குமரகுருபரன் பேசினார்.
கலெக்டர் குமரகுருபரன் கண்காட்சியை துவக்கி வைத்து பேசியதாவது: காட்சிப்படுத்தும் கண்காட்சி என்ற நிலை தற்போது இல்லை. பணத்திற்கு நாணயம் என்ற பெயர் தமிழர்கள் பண்பாட்டின் அடையாளாமாக விளங்குகிறது. சங்க காலத்தில் வாழ்ந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து அறிந்து கொள்ளவும், வெள்ளையர் காலத்தில் நம் நாட்டிற்கு வந்த தபால் துறையின் வரலாறு துவங்கி, நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் உருவம் பொறித்த தபால் தலைகள் போன்றவற்றை போற்றி பாதுகாக்க வேண்டும். பழைய கிராம ஃபோன் பெட்டிகளை பார்க்கும் இன்றைய மாணவர்களுக்கு, நமது விஞ்ஞானத்தின் படிப்படியான வளர்ச்சி குறித்து அறிவிப்பதாக உள்ளது. வரலாற்றை அறிந்த கொள்ள தபால் தலை சேகரிப்பு மாணவர்களுக்கு உதவுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கண்காட்சியில், அரங்கம் அமைத்திருந்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழ்ஙகப்பட்டது. மேலும், ஜேசீஸ் சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவி பழனியம்மாள் என்பவருக்கு, 1,500 ரூபாய், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள், காற்றலை மூலம் மின்சாரம் என்ற படைப்பை தந்த இளம் மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


