/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்
போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்
போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்
போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஜூலை 25, 2011 12:04 AM
புதுச்சேரி : வில்லியனூர் சுல்தான் பேட் ராக் இண்டர்நேஷனல் உயர்நிலைப்பள்ளி சமுதாய நலப்பணித்திட்டம் சார்பில் மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடந்தது.
பள்ளியின் தாளாளர் அப்துல்ரகுமான் வரவேற்றார். பள்ளியின் சேர்மன் முகமது பாரூக் தலைமை தாங் கினார். சிறப்பு அழைப்பாளர்களாக போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் பங்கேற்று போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். முகமது சையது, இமாம்அலி, ரியாசுதீன் மற்றும் மொய்தீன் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் ஆதிகேசவன் செய்தார். பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். அஸ்மா பேகம் நன்றி கூறினார்.