ADDED : ஜூலை 27, 2011 12:24 AM
திருக்கோவிலூர் : எடுத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.
இப்பள்ளியின் பிளஸ் 1 மாணவ, மாணவிகள் களப்பயணமாக பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். தலைமை ஆசிரியர் திருமகள் வழியனுப்பி வைத்தார். ஆசிரியர் வள்ளிநாயகம் தலைமையிலான ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்துச் சென்றனர். சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள், சுற்றுபுற சுகாதாரம், நோய்கள் வராமல் தடுக்கும் முறைகள் பற்றி சுகாதார ஆய்வாளர் பழனிசாமி விளக்கினார்.


