Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு மருத்துவமனைக்கு டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தல்

அரசு மருத்துவமனைக்கு டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தல்

அரசு மருத்துவமனைக்கு டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தல்

அரசு மருத்துவமனைக்கு டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தல்

ADDED : ஜூலை 28, 2011 12:47 AM


Google News

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் அல்லது தனியாக 'டிரான்ஸ்பார்மர்' அமைக்க வேண்டும் என நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நோயாளிகள் நலச்சங்க 12-வது வார்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன் வரவேற்றார். ஆர்.டி.ஓ., அழகிரிசாமி தலைமை வகித்தார். பொள்ளாச்சி எம்.எல்.ஏ., முத்துகருப்பண்ணசாமி, உடுமலை எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், எம்.பி., சுகுமார், தாசில்தார் ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருக்கும் குறைகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. கடந்த ஓராண்டில் நோயாளிகள் நலச்சங்க 'கார்பஸ் பன்ட் வட்டி' எடுத்து செலவு செய்தற்கான விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. கார்பஸ் நிதிக்கு புதிதாக கொடையாளிகள் சேர்த்தல் மற்றும் தொகையினை அதிகப்படுத்துதல் சம்பந்தமாக பேசப்பட்டது. கூட்டத்தில், நோயாளிகள் குடிநீர் தேவைக்காக ஆர்.ஓ., பிளான்ட்- எட்டு லிட்டர் அளவு கொண்ட 'டேங்க்கை' அனைத்து பகுதிகளிலும் வைக்க திட்டம், அதில் ஒரு 'ஆர்.ஓ., பிளான்ட்' கொடையாளிகள் சார்பில் வழங்குதல், அரசு மருத்துவமனை தரம் உயர்த்த அதிகளவில் இடம் தேவைப்படுகிறது. அதனால், தற்போது காலியாக உள்ள நகராட்சி பெண்கள் பள்ளி வளாகத்தை பெறுவதற்கு பொள்ளாச்சி நகராட்சி மற்றும் தமிழக அரசை கேட்டுக் கொள்ளுதல்; இரவு பணியில் இருக்கும் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. அதனால், மருத்துவமனை வளாகத்துக்கு முன் காவலாளிகள் நியமிப்பது குறித்து டி.எஸ்.பி.,யிடம் கேட்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பணியில் இருக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு தற்போது 50 ரூபாய்

மட்டும் தினக்கூலியாக வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தினமும் 100 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக ஒப்புதல் பெறப்பட்டது. தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் அல்லது மருத்துவமனைக்கு மட்டும் தனியாக

'டிரான்ஸ்பார்மர்' அமைக்க வேண்டும், கோவை - பழநி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், விபத்து மற்றும் அவசர சிகிச்சை நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். அதனால், தீவிர சிகிச்சை பிரிவு துவங்க மத்திய அரசிடம் நிதி ஒதுக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கல்வி நிறுவன நிர்வாகிகள், மருத்துவமனை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us