/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பஞ்சமி நில மீட்பு விழிப்புணர்வு பேரணி : சிவகாமி பங்கேற்புபஞ்சமி நில மீட்பு விழிப்புணர்வு பேரணி : சிவகாமி பங்கேற்பு
பஞ்சமி நில மீட்பு விழிப்புணர்வு பேரணி : சிவகாமி பங்கேற்பு
பஞ்சமி நில மீட்பு விழிப்புணர்வு பேரணி : சிவகாமி பங்கேற்பு
பஞ்சமி நில மீட்பு விழிப்புணர்வு பேரணி : சிவகாமி பங்கேற்பு
ADDED : ஜூலை 28, 2011 01:00 AM
திண்டிவனம் : சமுக சமத்துவ படை சார்பில் பஞ்சமி நிலம் மீட்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
விழுப்புரம் மாவட்ட எல்லை ஓங்கூரில் நேற்று காலை துவங்கிய இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணிக்கு கட்சியின் நிறுவன தலைவர் சிவகாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலர் பேராசிரியர் கேவீஜி, பேரணியை துவக்கி வைத்தார். ஆவணிப்பூர், பனையூர், சேந்தமங்கலம், பாங்கொளத்தூர், மேல்பேட்டை, மங்களம், சாரம் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக சென்ற பேரணி ஒலக்கூரில் முடிந்தது. நிறுவன தலைவர் சிவகாமி பேசுகையில்,'இந்த பிரசாரம் இம்மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை கடலூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பிரசாரம் தொடர்ந்து நடைபெறும்' என்றார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஜெயகுமார், மோகன்ராஜ், ராதாகிருஷ்ணன், ராதிகா, கிருஷ்ணன், வெங்கடேசன், மதியழகன், விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


