Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கல்லூரியில் கருத்தரங்கம்

கல்லூரியில் கருத்தரங்கம்

கல்லூரியில் கருத்தரங்கம்

கல்லூரியில் கருத்தரங்கம்

ADDED : ஜூலை 28, 2011 11:17 AM


Google News

கோவை: கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவு அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மைத்துறை சார்பில், 'மீட் தி ஹோட்டலியர்' எனும் கருத்தரங்கு நடந்தது.

மாணவி ஸ்டெபானிமரிஸா நேட்டோ வரவேற்றார். சென்னை, 'பார்ச்யூன் செலக்ட் பால்ம்ஸ்'ன் பயிற்சி மேலாளர் தாரிக் உசேன் பேசியதாவது: மத்திய அரசு, 300 வெளிநாடு ஓட்டல்களின் கிளையை, இந்தியாவில் துவக்க அனுமதி அளித்துள்ளது; 2015 ம் ஆண்டிற்குள் இவை துவக்கப்படும். இதன்மூலம், 80 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும். விருந்தினர்களை நேர்மறை எண்ணத்துடன் வரவேற்று, உபசரிக்க வேண்டும். பணியின்போது சீருடை அணிவதில் மிகுந்த அக்கறை காட்டவேண்டும். இத்துறையில் ஆரம்பத்திலேயே அதிக சம்பளம் கிடைக்காது. இரு ஆண்டுகள் பொறுமையுடன் வேலையை நல்முறையில் கற்றால், அதிக சம்பளம் கிடைக்கும், என்றார். கல்லூரி முதல்வர் சுந்தரராமன், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us