Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/மாலத்தீவிற்கு சென்றார் கிருஷ்ணா : அதிபருடன் பேச்சு நடத்துகிறார்

மாலத்தீவிற்கு சென்றார் கிருஷ்ணா : அதிபருடன் பேச்சு நடத்துகிறார்

மாலத்தீவிற்கு சென்றார் கிருஷ்ணா : அதிபருடன் பேச்சு நடத்துகிறார்

மாலத்தீவிற்கு சென்றார் கிருஷ்ணா : அதிபருடன் பேச்சு நடத்துகிறார்

ADDED : ஜூலை 28, 2011 09:24 PM


Google News
Latest Tamil News

மாலே : இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று மாலத்தீவு சென்றார்.

வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில், இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், அமைச்சர் கிருஷ்ணா அந்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது, மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அகமது நசீமை நேரில் சந்திக்கும் அவர், இரு தரப்பு உறவுகள், பிராந்திய நலன்கள் மற்றும் சர்வதேச பிரச்னைகள் பற்றியும் விவாதிக்கிறார்.

அதன் பின், மாலத்தீவு அதிபர் முகமது நசீதை சந்தித்து பேசும் கிருஷ்ணா, மாலே நகரில் நவம்பர் மாதம் நடக்கிற சார்க் மாநாட்டு கட்டமைப்புப் பணிகளுக்காக, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்குகிறார்.

மாலே நகரில், புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார மையத்தை திறந்து வைத்து பார்வையிடும் அவர், அங்குள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையையும் சுற்றிப் பார்க்கிறார். கடந்த 1995ல் இந்திய அரசின் உதவியால் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை, மாலத்தீவின் முக்கிய கேந்திரமாக விளங்குகிறது. இன்றளவும் இந்த மருத்துவமனையில் செயல்படுத்தப்படும் முக்கிய வளர்ச்சிப் பணிகளுக்கு, இந்திய அரசு தான் நிதியுதவி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா., காமன்வெல்த், நாம் மற்றும் சார்க் உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில், இந்தியாவின் நட்பு நாடாக மாலத்தீவு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே, அந்நாட்டுடன் ராஜ்ஜிய ரீதியிலான நட்புறவை மேம்படுத்துவதில், இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us