ADDED : ஜூலை 28, 2011 10:16 PM

அஜ்மீர் : இந்தியா வந்துள்ள, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கவுர், ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு நேற்று சென்றார்.
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கவுர், நேற்று ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ள கவாஜா மொய்னுதீன் தர்காவுக்குச் சென்றார். அவரை அம்மாவட்ட கலெக்டர் மஞ்சுராஜ் பால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
தர்காவில், 20 நிமிடங்கள் தொழுகை நடத்தினார். பின்னர், அஜ்மீரில் உள்ள சர்க்கியூட் ஹவுசில் தங்கினார். முன்னதாக, நேற்று காலை டில்லியில் உள்ள நிஜாமுதீன் அவ்லியா தர்காவுக்கு சென்று தொழுகை நடத்தினார். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி நிலவ வேண்டும் என்று அவர் தொழுகை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


