/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாஜி அமைச்சர், எம்.எல்.ஏ.,வை தி.மு.க.,வினர் சந்திப்புமாஜி அமைச்சர், எம்.எல்.ஏ.,வை தி.மு.க.,வினர் சந்திப்பு
மாஜி அமைச்சர், எம்.எல்.ஏ.,வை தி.மு.க.,வினர் சந்திப்பு
மாஜி அமைச்சர், எம்.எல்.ஏ.,வை தி.மு.க.,வினர் சந்திப்பு
மாஜி அமைச்சர், எம்.எல்.ஏ.,வை தி.மு.க.,வினர் சந்திப்பு
ADDED : ஆக 01, 2011 11:42 PM
கோவை : நில அபகரிப்பு வழக்கில் கோவை சிறையில் அடைக்கப்பட்ட எம்.எல்.ஏ.,
மாஜிஅமைச்சரை உறவினர்கள், கட்சியினர் என 35 பேர் நேற்று சந்தித்தனர்.
நில
அபகரிப்பு வழக்கில் மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு,
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால்,
உறவினர்கள் சந்திக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று காலை
முதல் மாஜி அமைச்சரின் மனைவி,மருமகள் உள்பட 20 பேர் சந்தித்தனர். மில்
அபகரிப்பு வழக்கில், உடுமலை சீனிவாசன் கொடுத்த புகாரில் சென்னை
திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.,அன்பழகன் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரை நேற்று சென்னையில் இருந்து வந்த தி.மு.க.,வினர் ஏழுமலை, பழனி உள்பட 15
பேர் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றனர்.


