/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/500 கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் தமிழக அரசுக்கு விண்ணப்ப மனு500 கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் தமிழக அரசுக்கு விண்ணப்ப மனு
500 கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் தமிழக அரசுக்கு விண்ணப்ப மனு
500 கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் தமிழக அரசுக்கு விண்ணப்ப மனு
500 கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் தமிழக அரசுக்கு விண்ணப்ப மனு
ADDED : ஆக 02, 2011 12:54 AM
விழுப்புரம் : அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தில் இணைவதற்காக விழுப்புரத்தில்
500 பேர் விண்ணப்பம் அனுப்பினர்.அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தில்
இணைவதற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆயிரம் ரூபாய்
வங்கி வரைவோலை(டிடி) அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தமிழகத்தில்
உள்ள ஆபரேட்டர்களுக்கு கடந்த 27ம் தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டது.இதனை
தொடர்ந்து விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த
கேபிள் 'டிவி' ஆபரேட்டகள் 500 பேர் நேற்று விண்ணப்பித்தனர்.
விழுப்புரத்தில் இணையதள மூலம் விண்ணப்பம் அனுப்பும் நிகழ்ச்சியை கேபிள்
'டிவி' ஆபரேட்டர்கள் நடுநிலை சங்க மாநில தலைவர் ரகு தலைமை தாங்கி துவக்கி
வைத்தார். மாவட்ட தலைவர்கள் விழுப்புரம் துளசிதரன், கடலூர் மாரிமுத்து,
செயலாளர் இந்திரஜித், பொருளாளர் மணி, துணை தலைவர் பாலா உள்ளிட்ட
நிர்வாகிகள் உடனிருந்தனர்.