Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/உதயநிதி மீது பொய் புகார் அளித்துள்ளதாக தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் போலீசில் மனு

உதயநிதி மீது பொய் புகார் அளித்துள்ளதாக தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் போலீசில் மனு

உதயநிதி மீது பொய் புகார் அளித்துள்ளதாக தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் போலீசில் மனு

உதயநிதி மீது பொய் புகார் அளித்துள்ளதாக தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் போலீசில் மனு

ADDED : ஆக 03, 2011 12:52 AM


Google News

சென்னை : உதயநிதி ஸ்டாலின் மீது, பொய் புகார் அளித்த அறக்கட்டளை நிர்வாகி மீது நடவடிக்கைக் கோரி, தி.மு.க., வழக்கறிஞர்கள் பிரிவு செயலர் பாரதி, கமிஷனரிடம் மனு அளித்தார்.

தர்மதோப்பு அறக்கட்டளை சார்பில், அரசு தானமாக கொடுத்த நிலத்தை, முன்னாள் அமைச்சர் பரிதியின் பி.ஏ., காகரின் மற்றும் சிலர் அபகரித்து விற்பனை செய்துவிட்டதாக, அறக்கட்டளை அறங்காவலர் ரங்காரெட்டி, கமிஷனரிடம் புகார் அளித்தார். இதில், முதல்வர் கருணாநிதி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடந்தையாக செயல்பட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தி.மு.க., வழக்கறிஞர்கள் பிரிவு செயலர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், வழக்கறிஞர்கள், கமிஷனர் திரிபாதியை சந்தித்து மனு அளித்தனர். அதில், இந்த நில விவகாரத்தில் உதயநிதிக்கு தொடர்பில்லை என்றும், புகார் பொய்யானது என தெரிவித்துள்ளதுடன், பொய் புகார் கொடுத்துள்ள ரங்காரெட்டியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



காகரினும் மறுப்பு: புகாரில் முக்கியமானவராக குறிப்பிடப்பட்ட, முன்னாள் அமைச்சரின் பி.ஏ., காகரினும் தன் மீது ரங்காரெட்டி அளித்துள்ள புகாரை மறுத்துள்ளார். அத்துடன், ரங்காரெட்டி மற்றும் அவருடன் உள்ளோர், அப்பகுதியில் உள்ள ஐ.சி.எப்., நிலம், வில்லிவாக்கம் போலீஸ் நிலையம் அமைந்துள்ள இடங்களை அறக்கட்டளை நிலம் எனக்கூறி வருகின்றனர். அறக்கட்டளை நிலம் என கூறப்படும் அந்த நிலத்தை, தோஷி பில்டர்ஸ் நிறுவனம் வாங்குவதற்கு நான் உதவி செய்தேன். இந்த நிலத்தை அபகரிக்க ரங்கா ரெட்டி முயற்சி செய்து வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us