தமிழக காங்., தலைவர் யார்? குழப்பும் தலைமை: மதுரை உண்ணாவிரதத்தில் போர்க்கொடி
தமிழக காங்., தலைவர் யார்? குழப்பும் தலைமை: மதுரை உண்ணாவிரதத்தில் போர்க்கொடி
தமிழக காங்., தலைவர் யார்? குழப்பும் தலைமை: மதுரை உண்ணாவிரதத்தில் போர்க்கொடி

மதுரை: தமிழக காங்., புதிய தலைவரை நியமிக்கக்கோரி, காமராஜர் தேசிய பயிற்சிப் பாசறை சார்பில், மதுரையில் உண்ணாவிரதம் நடந்தது.
பூமிநாதன் கூறியதாவது: நான் காங்., மாநில முன்னாள் பொதுச் செயலாளர். மதுரை லோக்சபா தொகுதியில் 1996 ல் சுப்பிரமணியசாமியை எதிர்த்து காங்.,சார்பில் போட்டியிட்டேன். தமிழகத்தில் காங்., ஆட்சியை இழந்து 44 ஆண்டுகள் ஆகிறது. மற்ற மாநிலங்களில் காங்., மாறி, மாறி வெற்றி, தோல்வியை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளது. சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தங்கபாலு அறிவித்தார். அதை காங்.,தலைமை ஏற்றுக்கொண்டதா? இல்லையா? என அறிவிக்கவில்லை. ஆனால், தங்கபாலு நான்தான் தலைவர் என்கிறார். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி மேற்குவங்கத்தில் காங்கிரசை வளர்க்கவில்லை. தமிழகத்தில் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்காமல் தி.மு.க.,வுடன் அவர் கூட்டணி அமைக்க காரணமாக இருந்தார். தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்காது இருந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும். தேர்தலில் தி.மு.க.,தோற்றாலும் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி விவாதித்தது. ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. ஆனால், காங்., கட்சியை வளர்க்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழக காங்., தலைவரை நியமிக்கக்கோரி ஆக.,6 ல் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடக்கும். பின், டில்லி காங்., அலுவலகத்தில் சத்தியாகிரகம் நடத்துவோம், என்றார்.


