ADDED : ஆக 03, 2011 10:46 PM
கோவை : அமிர்தா பல்கலை சார்பில், பொறியியல் மற்றும் கம்யூனிகேஷன் துறையில் புதிய மாணவர்களை வரவேற்கும் விழா, கல்லூரி வளாகத்தில் நடந்தது.
விழாவில், பல்கலை துணை வேந்தர் அபயாம்ருத சைதன்யா வரவேற்றார். சி.ஐ.ஆர்., துறையின் இயக்குனர் பரமேஸ்வரன் சி.ஐ.ஆர்., துறையின் செயல்பாடுகள், வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கினார். எம்.ஐ.டி., ஆராய்ச்சி குழுவை சேர்ந்த சீனிவாசன் ஆராய்ச்சி எவ்வாறு எதிர்காலத்தை மாற்றப்போகிறது என தெரிவித்தார்.தொடர்ந்து புதிய மாணவர்களுக்கு, கல்லூரி வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சர்வதேச தரம் வாய்ந்த நீச்சல் குளம், விருந்தினர் மாளிகை, பெரிய நூலகம், ஆய்வகங்கள், தொழிலகங்கள், விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடம், தங்கும் விடுதிகள், யோகா அரங்கு உள்ளிட்ட பகுதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. பல்கலை நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.


