/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மொபைல் போனில் ஆபாச படம் பணம் பறித்த 4 பேர் கைதுமொபைல் போனில் ஆபாச படம் பணம் பறித்த 4 பேர் கைது
மொபைல் போனில் ஆபாச படம் பணம் பறித்த 4 பேர் கைது
மொபைல் போனில் ஆபாச படம் பணம் பறித்த 4 பேர் கைது
மொபைல் போனில் ஆபாச படம் பணம் பறித்த 4 பேர் கைது
ADDED : ஆக 03, 2011 10:55 PM
கோவை : இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் மொபைல் போனில் ஆபாச படங்களை டவுன் லோடு செய்து கொடுத்து பணம் பறித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை, ராமநாதபுரம் பகுதியில் உரிமம் பெறாத புதுப்பட 'சி.டி.,'க்கள் தயாரித்து விற்கப்படுவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. சட்டவிரோத செயலில் ஈடுபடும் கும்பலைப் பிடிக்க, இன்ஸ்பெக்டர் நேரு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர கண்காணிப்பில் இருந்த தனிப்படை போலீசாருக்கு, புலியகுளம், பி.என்.பாளையம் ரோட்டில் உள்ள ட்ரைஸ்டார் மொபைல் விற்பனையகத்தில் வாடிக்கையாளர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மெமரி கார்ட் மூலம் ஆபாச படங்களை டவுன் லோடு செய்து தரும் அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மொபைல் விற்பனை மையத்திற்குள் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பாக, வேடபட்டி ரோட்டைச் சேர்ந்த கருணா ஹரிராம்(40), புலியகுளத்தைச் சேர்ந்த பிரபு(25), ராஜவீதியைச் சேர்ந்த திருமூர்த்தி(27), ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த விஜய் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து,மெமரி கார்டுகள், படங்களை காப்பி எடுக்கும் கருவிகள், சிடிக்கள், எல்.சி.டி.,ஸ்கிரீன் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.


