/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சுற்றுலாத்துறை மேம்படுத்த முதல்வர் ஜெ.,அக்கரை அமைச்சர் கோகுல இந்திரா தகவல்சுற்றுலாத்துறை மேம்படுத்த முதல்வர் ஜெ.,அக்கரை அமைச்சர் கோகுல இந்திரா தகவல்
சுற்றுலாத்துறை மேம்படுத்த முதல்வர் ஜெ.,அக்கரை அமைச்சர் கோகுல இந்திரா தகவல்
சுற்றுலாத்துறை மேம்படுத்த முதல்வர் ஜெ.,அக்கரை அமைச்சர் கோகுல இந்திரா தகவல்
சுற்றுலாத்துறை மேம்படுத்த முதல்வர் ஜெ.,அக்கரை அமைச்சர் கோகுல இந்திரா தகவல்
ADDED : ஆக 06, 2011 10:08 PM
காரைக்குடி:சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் ஆக., 30ல் சட்டசபையில்
நடைபெறும் சுற்றுலா தொடர்பான மானிய கோரிக்கைக்காக சுற்றுலா தலங்களை ஆய்வு
செய்து வருவதாக அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூர் அருகே பழமையான வைரவன்பட்டி, பிள்ளையார்பட்டி, குன்றக்குடி
முருகன் கோயில் மற்றும் காரைக்குடி அருகே கானாடுகாத்தான் அரண்மனை போன்ற
சுற்றுலா தலங்களை பார்வையிட்டு ஆய்வுக்கு பின், அமைச்சர் கூறியதாவது:
பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் சிவகங்கை, புதுக்கோட்டையில் அதிகளவு
பழமையான கோயில்கள், பல நூற்றாண்டுகளை கடந்தும் இன்றளவும் கம்பீரமாக
காட்சியளிக்கும் பாரம்பரிய செட்டிநாடு அரண்மனைகள் உள்ளன.
இவற்றை
பார்வையிடுவதற்காக, ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து
செல்கின்றனர். குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தை பொருத்தவரை திருப்புத்தூர்
அருகே பழமை வாய்ந்த வைரவன்பட்டி கோயில், அதை சுற்றி பிரமாண்டமான வீடுகள்
அதிகளவு உள்ளன. தவிர, பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற குடவறை கோயிலாக
கற்பக விநாயகர் கோயில் உள்ளது.
குன்றக்குடி முருகன் கோயில், மருதுபாண்டியர் கோட்டை, கானாடுகாத்தான்,
செட்டிநாடு பகுதிகளில் நகரத்தாரின் பாரம்பரியமான வீடுகள், பல நூற்றாண்டுகளை
கடந்த பங்களாக்கள் இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளன. வெளிநாட்டு
பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில், சுற்றுலா தலங்களில் உள்ள முக்கிய
இடங்களில் போதிய அடிப்படை, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் வகையில்
அறிக்கையாக தயாரித்து, அதை முதல்வர் ஜெ., விடம் வழங்கப்படவுள்ளது. சுற்றுலா
துறையில் வளர்ச்சிக்கு முதல்வர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
முன்னோட்டமாக, சிவகங்கை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு செய்தோம்.
மேலும், ஆக., 30 ல் சுற்றுலா துறை தொடர்பாக பட்ஜெட் கூட்ட தொடரில் மானிய
கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ளது, என்றார்.சுற்றுலா செயலர் ஜெயக்கொடி,
கலெக்டர் ராஜாராமன், மாவட்ட செயலாளர் முருகானந்தம் உடனிருந்தனர்.


