/உள்ளூர் செய்திகள்/சென்னை/கப்பல் பயணத்தில் கனவுத் திருமணம் "அமெட் மெஜஸ்டிக்' கப்பலுக்கு வரவேற்புகப்பல் பயணத்தில் கனவுத் திருமணம் "அமெட் மெஜஸ்டிக்' கப்பலுக்கு வரவேற்பு
கப்பல் பயணத்தில் கனவுத் திருமணம் "அமெட் மெஜஸ்டிக்' கப்பலுக்கு வரவேற்பு
கப்பல் பயணத்தில் கனவுத் திருமணம் "அமெட் மெஜஸ்டிக்' கப்பலுக்கு வரவேற்பு
கப்பல் பயணத்தில் கனவுத் திருமணம் "அமெட் மெஜஸ்டிக்' கப்பலுக்கு வரவேற்பு
ADDED : ஆக 07, 2011 12:56 AM
சென்னை : ஆழமான நீலக்கடலில், அலைகளின் தாலாட்டிற்கிடையே, 'அமெட் மெஜஸ்டிக்' கப்பலில் கனவுத் திருமணங்களை நடத்த, பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கப்பலில் திருமணம் செய்து கொள்ள, பதிவுகளும் அதிகரித்து வருகின்றன.சென்னையிலிருந்து ஒரு மாதமாக,'அமெட் மெஜஸ்டிக்' கப்பல் இயங்கி வருகிறது. இந்த கப்பல், புகழ்பெற்ற அமெட் பல்கலையின், 'அமெட் க்ரூய்ச்சர்' என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது.நீச்சல் குளம், கடலைப் பார்க்கும்படி அமைந்த உணவு விடுதி, டிஸ்கோ அரங்குகள், டிஸ்கோ அரங்குகளுடன் இரண்டு, மூன்று, நான்கு பேர் தங்கும் அறைகள், சாதாரண கேபின்கள், சொகுசு அறைகளும் உள்ளன. கருத்தரங்க கூடங்களும் உள்ளன.இந்த கப்பல், ஜூன் 9 அன்று தன் பயணத்தைத் துவக்கியது. நிறுவனங்கள், சங்கங்கள் தங்களின் விருந்து, நிகழ்ச்சிகளை நடத்த புதுமாதிரியான இடம் தேடுகின்றன. இவ்வாறு, வித்தியாசமான அனுபவத்தை விரும்புவோரிடம்,'அமெட் மெஜஸ்டிக்' கப்பல் பயண நிகழ்வுகள் பிரபலமடைந்து வருகின்றன.'அமெட் மெஜஸ்டிக்' கப்பல், கனவு திருமண இடமாக உள்ளது. மாறுபட்ட அனுபவத்தை பெற விரும்பும் தம்பியர்களுக்கு, நட்சத்திர ஓட்டல்களில் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் இங்கு கிடைக்கின்றன.கப்பல் நிர்வாகத்தினர் கூறுகையில்'கடல் சம்பந்தமான எல்லா நிறுவனங்களும் தொடர்பு கொண்டுள்ளதாலும், நடைமுறையில் உள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட, முதல் இந்திய கப்பல் இது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் என்ற வகையில், பணத்தை தொடங்கியதோடு, ஒரு மாதத்தில், 4,000 பயணிகளோடு, 14 கடல் பயணங்களையும் வெற்றிகரமாக முடித்துள்ளது' என்றனர்.மேலும்,' சிறந்த பயணத் திட்டங்கள், சிறந்த சேவைகளையும், நியாயமான கட்டணத்தில் கிடைக்கச் செய்வதும், இந்திய உல்லாசப் பயண சுற்றுலாவை வெவ்வேறு பிரிவு மக்களிடமும் எடுத்துச் செல்லும்' என்றனர்.கப்பலின் உள்ள வசதிகள், சேவைகளைப் பற்றி அறிந்த பல நிறுவனங்கள், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற குழுக்கள், தங்களின் ஆண்டு சந்திப்புகளையும், தங்களின் தயாரிப்புகளை டீலர்களுக்கு அறிமுகம் செய்யும் விழாக்களையும் நடத்த ஆர்வமுடன் பதிவு செய்துள்ளன.


