ADDED : ஆக 07, 2011 12:59 PM
ஆத்தூர் : அரசு கேபிள் டிவி திட்டத்தை அமல்படுத்துவதற்காக லோக்கல் சேனல்கள் ஒளிபரப்பிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இருப்பினும் அரசு உத்தரவை மீறி ஆத்தூர் பகுதியில் 3 லோக்கல் சேனல்கள் நேற்று இரவு 7 மணி முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒளிபரப்பப்பட்டு வந்த 8 லோக்கல் சேனல்களில் அரசு உத்தரவிட்டு பிறகு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு 5 சேனல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது அனுமதியின்றி இயங்கி வரும் லோக்கல் சேனல்கள் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட பின்னரும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க தீர்மானித்துள்ளனர்.


