/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தெருவிளக்குகளை சரிசெய்யும் பணியில் ஊராட்சி தலைவர்கள்தெருவிளக்குகளை சரிசெய்யும் பணியில் ஊராட்சி தலைவர்கள்
தெருவிளக்குகளை சரிசெய்யும் பணியில் ஊராட்சி தலைவர்கள்
தெருவிளக்குகளை சரிசெய்யும் பணியில் ஊராட்சி தலைவர்கள்
தெருவிளக்குகளை சரிசெய்யும் பணியில் ஊராட்சி தலைவர்கள்
ADDED : ஆக 11, 2011 10:40 PM
ராமநாதபுரம் : உள்ளாட்சி தேர்தலில் பதவியை தக்க வைக்க, தெருவிளக்கு பராமரிப்பு, ரேஷன்கார்டு, பட்டா வாங்கி கொடுத்தல் என ஊராட்சி தலைவர்கள் தற்போது 'பிசி'யாக காணப்படுகின்றனர்.
அதிகாரமிக்க பதவியாக கருதப்படும் உள்ளாட்சி அமைப்புகளில் பதவியை கைப்பற்ற பல மாவட்டங்களில் கடும் போட்டி நிலவி வருகிறது. ஐந்து ஆண்டுகளில் செய்த வளர்ச்சிப்பணிகள் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், ஊராட்சி தலைவர்கள் பம்பரமாய் சுழன்று வருகின்றனர். நீண்ட நாட்களாக எரியாமல் உள்ள தெருவிளக்குள் தற்போது சரிபார்க்கப்பட்டு, எரிய துவங்கி உள்ளன. இதுவரை மின் வாரியத்தை குறை கூறி வந்த சில ஊராட்சி தலைவர்கள், தங்கள் சொந்த பணத்தில் பணிகளை செய்து வருகின்றனர். மேலும், ஜாதி சான்றிதழ், பட்டா மாறுதல், ரேஷன் கார்டு போன்ற பணிகளுக்காக, தாலுகா அலுவலகத்தில் படையெடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வருகின்றனர். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கேட்காமலேயே உதவிகள் செய்யப்படுகிறது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிராமங்களில் உள்ள ஊராட்சி தலைவர் சொன்னார், சாதி சான்றிதழ் தாருங்கள் என்று கேட்டு வருகிறார்கள். போன் மூலம் சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவரை தொடர்பு கொண்டு கேட்டால், ஓட்டு வாங்க வேண்டியுள்ளது; அதனால், பார்த்து செய்யுங்கள் என்று சிபாரிசு செய்கிறார், என்றார்.


