Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலம் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு

குற்றாலம் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு

குற்றாலம் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு

குற்றாலம் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு

ADDED : ஆக 13, 2011 01:26 AM


Google News
குற்றாலம் : குற்றாலம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலகரம் ஸ்டேட் பாங்க் காலனியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவர் பட்டுப்பூச்சி வளர்ப்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (47). இவரும், அருகே வசிக்கும் 3 பெண்களும் சேர்ந்து அருகேயுள்ள இலஞ்சி குமரன் கோயிலுக்கு சென்று சுவாமி கும்பிட்டு மேலகரத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். சீவலப்பேரிகுளம் அருகே வந்தபோது சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கஸ்தூரி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார். இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் ரூபாய் ஆகும். கஸ்தூரி கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றாலம் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குபதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us