ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்ய அமைச்சர் யோசனை
ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்ய அமைச்சர் யோசனை
ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்ய அமைச்சர் யோசனை

மதுரை : ''ஓட்டல்களில் உணவுப் பொருள் தரத்தை பரிசோதிக்க திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்,'' என அமைச்சர் செல்லப்பாண்டியன் பேசினார்.
அமைச்சர் பேசியதாவது: வெளிமாநிலத்தில் இருந்து வருவோரை பட்டாசு தொழிற்சாலை பணியில் அமர்த்தக் கூடாது. முறையான பட்டாசு உரிமம் பெற்ற தொழிற்சாலைகள் அரசின் உத்தரவை கடைபிடிக்கின்றனரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மீன்கடை, இறைச்சிக்கடை, பலசரக்கு, காய்கறி கடைகளில் தரமான தராசு இல்லையென்றும், மின் இயந்திரத்திலும் எடை குறைவு என புகார்கள் வருகின்றன. எனவே இதில் தனிக்கவனம் செலுத்தி சரியான எடையில் பொருள் வழங்கப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்து உணவுப் பொருள் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும்.
வாரியங்களை முறைப்படுத்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பத கண்டறிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


