Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சுற்றுச்சூழல் பாதிக்காத விநாயகர் சிலைகளை பயன்படுத்த கலெக்டர் வேண்டுகோள்

சுற்றுச்சூழல் பாதிக்காத விநாயகர் சிலைகளை பயன்படுத்த கலெக்டர் வேண்டுகோள்

சுற்றுச்சூழல் பாதிக்காத விநாயகர் சிலைகளை பயன்படுத்த கலெக்டர் வேண்டுகோள்

சுற்றுச்சூழல் பாதிக்காத விநாயகர் சிலைகளை பயன்படுத்த கலெக்டர் வேண்டுகோள்

ADDED : ஆக 22, 2011 12:39 AM


Google News
கடலூர் : விநாயகர் சதுர்த்தியின் போது களிமண்ணாலான சிலைகளை பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் அமுதவல்லி கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின்போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பின் நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். பிளாஸ்டர் ஆப் பாரிசினால் செய்யப்பட்ட ரசாயன வர்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை வழிபட்ட பின்னர் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடுகிறது. பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட சுடப்படாத மற்றும் எவ்வித ரசாயனப் கலவையற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே வரும் விநாயகர் சதுர்த்தியின்போது பயன்படுத்த வேண்டும். ரசாயன வர்ணம் பெயிண்ட் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதை தவிர்க்க வேண்டும். கடல் மற்றும் ஏரிகளில் 500 மீட்டர் தூரம் எடுத்துச் சென்று சிலைகளை கரைக்க வேண்டும். அரசால் அறிவிக்கப்பட்ட தேவனாம்பட்டினம் கடற்கரை, உப்பனாறு, கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு, காவேரி பகுதிகளில் சிலைகளை கரைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us