Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/புறநகர் ரயில் போக்குவரத்து மாற்றம்

புறநகர் ரயில் போக்குவரத்து மாற்றம்

புறநகர் ரயில் போக்குவரத்து மாற்றம்

புறநகர் ரயில் போக்குவரத்து மாற்றம்

ADDED : ஆக 26, 2011 12:00 AM


Google News

சென்னை : ரயில்பாதை பராமரிப்பு பணி காரணமாக, புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் இருந்து, திருமால்பூர் ரயில் நிலையம் வரை, ரயில் பாதை பராமரிப்பு பணி, நாளை முதல், 28ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக, செங்கல்பட்டில் இருந்து, பகல் 11.30 மணியளவில் புறப்படும் சென்னை கடற்கரை-திருமால்பூர் ரயில், செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும். செங்கல்பட்டில் இருந்து பகல் 1.40 மணிக்கு புறப்படும், திருமால்பூர்-கடற்கரை ரயில், செங்கல்பட்டில் இருந்து புறப்படும். செங்கல்பட்டில் இருந்து, 12.20 மணிக்கு புறப்படும், கடற்கரை-திருமால்பூர் ரயில், வாலாஜாபாத் வரை மட்டும் இயக்கப்படும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us