/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கூட்டாம்புளி சந்தன முத்துமாரி அம்மன் கோயில் கொடை விழாகூட்டாம்புளி சந்தன முத்துமாரி அம்மன் கோயில் கொடை விழா
கூட்டாம்புளி சந்தன முத்துமாரி அம்மன் கோயில் கொடை விழா
கூட்டாம்புளி சந்தன முத்துமாரி அம்மன் கோயில் கொடை விழா
கூட்டாம்புளி சந்தன முத்துமாரி அம்மன் கோயில் கொடை விழா
ADDED : ஆக 28, 2011 01:04 AM
சாயர்புரம் : புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளியில் சந்தன முத்துமாரி அம்மன் கொடை விழா வரும் 30ம் தேதி நடக்கிறது.
கொடை விழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி கால்நட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
28ம் தேதி இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை வழிபாடும், இரவு 9 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது. 29ம் தேதி இரவு 9 மணிக்கு இசை பட்டிமன்றமும், 11 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. கொடை நாளான 30ம் தேதி காலை அம்மனுக்கு தீர்த்த நீராடி ஊர்வலம் வருதல், மதியம் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது. அதை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்றிரவு 10 மணிக்கு சிருங்காரி மேளம், நையாண்டி மேளத்துடன் கரகாட்டம் நடக்கிறது. தொடர்ந்து நள்ளிரவு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல், அம்மனுக்கு முளைப்பாரி எடுத்தல், அம்மனுக்கு சிறப்பு பூஜை, உற்சவ அம்மன் பூஜை, வாண வேடிக்கையுடன் ராஜமேளம் முழங்க அம்மன் சப்பர பவனி வருதல் ஆகியவை நடக்கிறது. 31ம் தேதி மதியம் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், அம்மன் மஞ்சள் நீராடுதல், அம்மனுக்கு மதிய பூஜை, முளைப்பாரி பெண்கள் கும்பி கொட்டி அம்மன் வாழ்த்து பாடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. மதியம் 3 மணிக்கு வரிப்பழம் பகிர்தல் நடக்கிறது. இரவு 9 மணிக்கு ஸ்டார் நைட் இன்னிசை கச்சேரி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி செந்தூர்பாண்டி, கோயில் நிர்வாகிகள் சேகர், குணபாலன், ஐயங்கோபால், தங்கலிங்கம் மற்றும் நிர்வாக கமிட்டியினர், வரிதாரர்கள் செய்துள்ளனர்.


