/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தேர்தலில் போட்டியிட முடியவில்லையே! இரு ஊராட்சிகளின் பிரமுகர்கள் "அப்செட்'தேர்தலில் போட்டியிட முடியவில்லையே! இரு ஊராட்சிகளின் பிரமுகர்கள் "அப்செட்'
தேர்தலில் போட்டியிட முடியவில்லையே! இரு ஊராட்சிகளின் பிரமுகர்கள் "அப்செட்'
தேர்தலில் போட்டியிட முடியவில்லையே! இரு ஊராட்சிகளின் பிரமுகர்கள் "அப்செட்'
தேர்தலில் போட்டியிட முடியவில்லையே! இரு ஊராட்சிகளின் பிரமுகர்கள் "அப்செட்'
ADDED : ஆக 29, 2011 12:06 AM
அன்னூர் : 'உள்ளாட்சி தேர்தலில் போட் டியிட முடியவில்லை' என, இரண்டு ஊராட்சிகளில் கட்சி நிர் வாகிகள் புலம்பி வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக ஓட்டுச்சாவடிகள் ஆய்வு செய்யும் பணியில் ஒன்றிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளதாக கட்சி பிரமுகர்கள் பலர் புலம்பி வருகின்றனர். இது குறித்து அக்கரை செங்கப்பள்ளி மற்றும் பசூர் ஊராட்சியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் கூறியதாவது: அன்னூர் ஒன்றியத்தில் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் உள்ள 15 ஊராட்சிகள் அடங்கிய மாவட்ட கவுன்சிலர் பதவி 15 ஆண்டுகளுக்கு முன் 'ரிசர்வ்' என அறிவிக்கப்பட்டது. அன்னூர் ஒன்றியத்தின் 21 ஊராட்சிகளில், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், பசூர், பொகலூர், மசக்கவுண்டன்செட்டிபாளையம் மற்றும் நாரணாபுரம் ஆகிய ஆறு ஊராட்சிகளும், ஒன்றிய கவுன்சிலர் பதவியில், அக்கரை செங்கப்பள்ளி, பசூர், மசக்கவுண்டன் செட்டிபாளையம், அ.மேட்டுப்பாளையம் ஆகிய ஊராட்சிகளும் 'ரிசர்வ்' என ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் அக்கரை செங்கப்பள்ளி, பசூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளில், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய மூன்று பதவிகளுக்கும், ஆதிதிராவிட வகுப்பினர் அல்லாதவர்கள், போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சியில், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இரண்டு பதவிக்கும், ஆதிதிராவிடர் அல்லாதவர்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அன்னூரை உள்ளடக்கிய, அவிநாசி சட்டசபை தொகுதி 1976ம் ஆண்டு முதல் 35 ஆண்டுகளாக ஒன்பது பொதுத்தேர்தலாக'ரிசர்வ்' ஆக உள்ளது. இத்துடன் அவிநாசி தொகுதியை உள்ளடக்கிய, நீலகிரி லோக்சபா தொகுதியும் 2009 தேர்தல் முதல் 'ரிசர்வ்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருதரப்பினர் தேர்தலில் போட்டியிடவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆதிதிராவிட வகுப்பினர் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கீடு முடிவு செய்யும்போது, ஒரே ஊராட்சியில் அனைத்து பதவிகளும் 'ரிசர்வ்' ஆக ஒதுக்கீடு செய்யக்கூடாது. ஒரு ஊராட்சியில் நான்கு பதவிகளில், இரண்டு பொதுவாகவும், இரண்டு 'ரிசர்வ்' எனவும் ஒதுக்கவேண்டும். ஒரு ஊராட்சியில் நான்கில், மூன்று பதவிகள் 'ரிசர்வ்' என ஒதுக்கும்போது, பெரும்பாலானவர்கள் போட்டியிட முடியாத நிலை உள்ளது. எம்.எல்.ஏ., பதவி என்றால் தமிழகத்தில் எங்கும், எம்.பி., பதவியென்றால் நாடு முழுவதும் போட்டியிடலாம். ஆனால் உள்ளாட்சி அமைப்பில், போட்டியிடும் பதவியின் அதிகார எல்லைக்குள் வாக்காளராக இருந்தால் மட்டும் அங்கு போட்டியிட முடியும். எனவே பசூர் மற்றும் அக்கரை செங்கப்பள்ளியில் பலர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அரசியல் பிரமுகர்கள் தெரிவித்தனர்.


