Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பேரவை கிளை கூட்டத்தில் தீர்மானம்

பேரவை கிளை கூட்டத்தில் தீர்மானம்

பேரவை கிளை கூட்டத்தில் தீர்மானம்

பேரவை கிளை கூட்டத்தில் தீர்மானம்

ADDED : செப் 03, 2011 11:26 PM


Google News

கோத்தகிரி : கோத்தகிரி கூக்கல் கிராமத்தில் இ.கம்யூ.,கட்சியின் பேரவை கிளை கூட்டம் நடந்தது.

நிர்வாகி நஞ்சன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ராஜ்பெள்ளி முன்னிலை வகித்தார். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளராக காளிதாஸ், துணை செயலாளராக நஞ்சன், பொருளாளராக லிங்கன், தாலுகா கமிட்டி பிரதிநிதியாக நஞ்சாகவுடர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், குன்னூர் கூக்கல் இடையே அரசு பஸ் மீண்டும் இயக்க வேண்டும்; தவறும்பட்சத்தில் போராட்டம் நடத்துவது; கூக்கல் பட்டகொரை செல்லும் வழியில் ஆற்றை கடக்க பாலம் கட்டித்தர வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நஞ்சாகவுடர் நன்றி கூறினார்.



* இ.கம்யூ.,மசக்கல் கிளை பேரவை கூட்டம் மசக்கல் கிராமத்தில் நடந்தது. சின்னம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ராஜூபெள்ளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளராக சாந்தகுமார், துணை செயலாளராக பாஸ்கரன், பொருளாளராக சின்னம்மாள், தாலுகா பிரதிநிதியாக பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், மசக்கல் பகுதியில் ஆதிவாசி மக்கள் வசிக்கும் கிராமங்களில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும்; தேகிலி கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பள்ளியில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாப்பாத்தி நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us