Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை.யில் பள்ளிகளுக்கு இடையே நீச்சல் போட்டி : விவேகானந்தா வித்யாஷ்ரம் சாம்பியன்

பாளை.யில் பள்ளிகளுக்கு இடையே நீச்சல் போட்டி : விவேகானந்தா வித்யாஷ்ரம் சாம்பியன்

பாளை.யில் பள்ளிகளுக்கு இடையே நீச்சல் போட்டி : விவேகானந்தா வித்யாஷ்ரம் சாம்பியன்

பாளை.யில் பள்ளிகளுக்கு இடையே நீச்சல் போட்டி : விவேகானந்தா வித்யாஷ்ரம் சாம்பியன்

ADDED : செப் 03, 2011 11:54 PM


Google News



திருநெல்வேலி : பாளை.யில் மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு இடையில் நடந்த நீச்சல் போட்டியில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

விவேகானந்தா வித்யாஷ்ரம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான நீச்சல் போட்டி பாளை.அண்ணா ஸ்டேடியத்தில் நேற்று துவங்கியது. விவேகானந்தா விஷ்யாஷ்ரம் கல்வி மற்றும் அறக்கட்டளை சேர்மன் சிவ சேதுராமன் நீச்சல் போட்டியை துவக்கி வைத்தார். இப்போட்டியில் 11 பள்ளிகளில் இருந்து 186 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு 7 பிரிவுகளின் கீழ் நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. நீச்சல் போட்டியில் 85 புள்ளிகள் பெற்று வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி முதலிடத்தையும், 66 புள்ளிகள் பெற்று தூத்துக்குடி விகாஷா பள்ளி இரண்டாம் இடத்தையும், 59 புள்ளிகள் பெற்று பாளை.பெல் பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. அதிக புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தை பிடித்த வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி அணிக்கு, சட்டம் ஒழுங்கு போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அளித்து பாராட்டினார். தனிநபர்கள் பிரிவில், எமிலின் ராபின்சிங், ஆதித்யா ஜூவாலா, சேதுமாணிக்கவேல், கரோலின், தேவிமகராசி, ஆதிமூல பெருமாள் உள்பட 16 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம், நீச்சல் பயிற்சியாளர் பிரேம்குமார், நீச்சல் கழக செயலாளர் லட்சுமணன், பெனிட்சன், விவேகானந்தா வித்யாஷ்ரம் துணை முதல்வர் ராஜலட்சுமி உட்பட பள்ளி ஆசிரியைகள் மற்றும் நீச்சல் பயிற்சியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி முதல்வர் திருமாறன் நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us