உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க.,வில் தொய்வு !
உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க.,வில் தொய்வு !
உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க.,வில் தொய்வு !
சென்னை: தமிழகத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சியினரும் விருப்ப மனுவை பெற்று வருகின்றனர். ஆனால் தி.மு.க.,வினர் எவ்வித ஆர்வமும் காட்டாமல் சற்று தொய்வு நிலையில் உள்ளனர். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற சூட்டுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. வரும் அக்டோபர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்ககப்படுகிறது.
சட்டசபை வெற்றியை போல, உள்ளாட்சிகளையும், கைப்பற்ற முடியும் என அ.தி.மு.க., நம்பியிருக்கிறது. இதற்கான வேலையில் இக்கட்சியினர் களம் இறங்கி விட்டனர்.
போட்டியிட விரும்புவோரிடம் மனுக்களை பெறுவதில் அ.தி.மு.க., முந்தியது. அடுத்து தே.மு.தி.க., மனுக்களை பெற்று வருகிறது. கம்யூ., பா.ம.க., கட்சிகள் தீவிர ஆலோசனையில் உள்ளன. சிறு, சிறு கட்சிகள் எங்கு செல்லலாம் என யோசனையில் ஈடுபட்டிருப்பதால் , கூட்டணியில் மாற்றம் எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., மற்றும் காங்., வட்டாரங்களில் உள்ளாட்சி தேர்தல் பணியை துவக்கியதற்கான அறிகுறி தெரியவில்லை. வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த விசாரணையால் தி.மு.க., உள்ளாட்சி தலைவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் தேர்தலில் போட்டியிட ஆர்வமில்லாத நிலையே காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மு.க., ஸ்டாலின் கூறுகையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் என கூறியிருந்தார். ஆனால் இவ்வாறு நடக்க வேண்டுமானால் கட்சி பணிகள் தொய்வு சீர்படுத்தப்படுவது நல்லது என அக்கட்சி தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.


