/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சியில் மழை தீவிரம் வளர்ச்சி பணிகள் பாதிப்புபொள்ளாச்சியில் மழை தீவிரம் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
பொள்ளாச்சியில் மழை தீவிரம் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
பொள்ளாச்சியில் மழை தீவிரம் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
பொள்ளாச்சியில் மழை தீவிரம் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
ADDED : செப் 04, 2011 11:40 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், மழை பொழிவு
தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி சமவெளிப்பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் ஒரு
வாரமாக மழை பொழிவு தீவிரமடைந்துள்ளது. மழையினால் ஊராட்சிகளில் நடக்கும்
கட்டுமான பணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சோலையாறு அணையின் 160 அடி
உயரத்தில் 162.43 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,507 கனஅடி
தண்ணீர் வரத்துள்ளது. அணையிலிருந்து, வினாடிக்கு 4,677 கன அடி தண்ணீர்
வெளியேற்றப்படுகிறது. பரம்பிக்குளம் அணையின் 72 அடி உயரத்தில் 71.82 அடி
நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,544 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது.
அணையிலிருந்து விநாடிக்கு 5,837 கன அடி தண்ணீர் உபரியாக
வெளியேற்றப்படுகிறது. நேற்று காலை 8.00 மணி வரை பெய்த மழையளவு (மி.மீ.,):
சோலையாறு - 20, பரம்பிக்குளம் - 13, ஆழியாறு - 2, அமராவதி - 2, மேல்நீராறு -
48, கீழ் நீராறு - 23, வால்பாறை - 18, பொள்ளாச்சி - 15, மணக்கடவு - 17,
நவமலை - 2, நல்லாறு - 4, சர்க்கார்பதி - 4, தூணக்கடவு - 18, பெருவாரிபள்ளம்
- 23, காடம்பாறை - 4.


