/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தாலுகா அலுவலகங்களில் காலிப்பணியிடம் மனுதாரர்களுக்கு ஜாதிசான்றிதழ்தாலுகா அலுவலகங்களில் காலிப்பணியிடம் மனுதாரர்களுக்கு ஜாதிசான்றிதழ்
தாலுகா அலுவலகங்களில் காலிப்பணியிடம் மனுதாரர்களுக்கு ஜாதிசான்றிதழ்
தாலுகா அலுவலகங்களில் காலிப்பணியிடம் மனுதாரர்களுக்கு ஜாதிசான்றிதழ்
தாலுகா அலுவலகங்களில் காலிப்பணியிடம் மனுதாரர்களுக்கு ஜாதிசான்றிதழ்
ADDED : செப் 06, 2011 01:08 AM
திருநெல்வேலி : தாலுகா அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஜாதி சான்றிதழ்களை விரைவாக கிடைக்க செய்யவும் முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் வேலாயுதம் அளித்துள்ள மனுவில், 'பாளை., மற்றும் நெல்லை தாலுகா அலுவலகத்தில் ஜாதி சான்றிதழ், இருப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் என பல்வேறு சான்றிதழ்கள் பெற வருகின்றனர். இந்த சான்றிதழ்கள் வாங்க மாதக் கணக்கில் அலையவேண்டியுள்ளது. இதனால் கிராம மக்கள் மற்றும் நகர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சான்றிதழ் கொடுக்காவிட்டால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் சலுகைகள் கிடைக்காமல் போய்விடுகிறது. தாலுகா அலுவலகத்தில் உடனுக்குடன் சான்றிதழ்கள் கொடுக்கப்படுவதில்லை. சான்றிதழ்களை பெற 30 முதல் 45 நாட்கள் ஆகிறது. மேலும் தாலுகா அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே சான்றிதழ்கள் வழங்கும் விஷயத்தில் முதல்வர் தீவிர கவனம் செலுத்தி நல்ல தீர்வு காணவும், விரைவில் சான்றிதழ்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


