Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வேளாண் சங்கத்தில் திருட முயற்சி

வேளாண் சங்கத்தில் திருட முயற்சி

வேளாண் சங்கத்தில் திருட முயற்சி

வேளாண் சங்கத்தில் திருட முயற்சி

ADDED : செப் 06, 2011 01:57 AM


Google News
ப.வேலூர்: ப.வேலூர் அருகே, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ப.வேலூர் பெருங்குறிச்சியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. அந்த சங்க செயலாளர் மணி நேற்று காலை அலுவலகத்தை திறக்க வந்துள்ளார். அப்போது, முன்புற கேட் பூட்டு, உள்புற மரக்கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த மணி உள்ளே சென்று பார்த்த போது, அங்கு பொருட்கள் சிதறிக்கிடந்துள்ளன. பணம், நகை எதுவும் திருட்டு போகவில்லை. சம்பவ இடத்துக்கு நல்லூர் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. சம்பவம் தொடர்பாக, நல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us