திருச்சியில் வெடிவிபத்து: 2 பேர் பலி
திருச்சியில் வெடிவிபத்து: 2 பேர் பலி
திருச்சியில் வெடிவிபத்து: 2 பேர் பலி
ADDED : செப் 06, 2011 08:39 PM
திருச்சி: திருச்சியில் நடந்த வெடிவிபத்தில் 2 பேர் பலியானார்கள்.
2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சந்தைப்பேட்டை பகுதியில் குப்புதின்(35) என்பவர் வாணவேடிக்கை, கிராம திருவிழாக்களுக்கு பயன்படும் பட்டாசுகள் லைசென்ஸ் பெற்று நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று கந்தகம், வெடிஉப்பு மற்றும் மோட்டார் ஆகியவற்றை வாங்கி கொண்டு சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்தார். குடோனில் பொருட்களை இறக்கும் போது, கந்தகம் கைதவறி கீழே விழுந்து தீப்பிடித்தது. தீ வெடிஉப்பு ஆகியவற்றிற்க்கும் பரவியது. இந்த விபத்தில் குப்புதின், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த கண்ணன், மோட்டாரை பொருத்த வந்த சங்கர், குடோனில் வேலை பார்த்து வந்த செந்தில்குமார் ஆகியோருக்கு படுகாயமடைந்தனர். சங்கர் கால் முறிந்த நிலையில் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில்குமார் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குப்புதின், கண்ணன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் பலியானார்கள். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


