Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாவட்ட யோகா: ஆதிவாசி மாணவர்கள் சாம்பியன்

மாவட்ட யோகா: ஆதிவாசி மாணவர்கள் சாம்பியன்

மாவட்ட யோகா: ஆதிவாசி மாணவர்கள் சாம்பியன்

மாவட்ட யோகா: ஆதிவாசி மாணவர்கள் சாம்பியன்

ADDED : செப் 07, 2011 12:16 AM


Google News
துடியலூர் : துடியலூரில் நடந்த மாவட்ட அளவிலான யோகா போட்டியில், ஆனைகட்டி ஆதிவாசி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.

துடியலூரில் உள்ள மாரப்ப கவுண்டர் திருமண மண்டபத்தில் தன்னம்பிக்கை யோக தியான மையம், சிடெக் கம்ப்யூட்டர் மையம் ஆகியன இணைந்து 18 வது மாவட்ட அளவிலான யோகசன போட்டிகளை நடத்தியது. செயின்ட் மேரீஸ் பள்ளி, சரணாலயம், இணைந்த கரங்கள் ஆதிவாசி பள்ளி மாணவர்கள், கீர்த்திமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி, தடாகம் பெண்கள் மற்றும் ஆண்கள் பள்ளி உள்ளிட்ட 20 பள்ளிகள் பங்கேற்றன. முதல் பரிசை ஆனைகட்டி இணைந்த கரங்கள் ஆதிவாசி மாணவர்கள் பெற்றனர். இரண்டாம் பரிசை சரணாலயம் பள்ளி மாணவர்களும், மூன்றாவது பரிசை செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவர்களும் பெற்றனர். ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளுக்கு நடுவராக பாபுஜி குழுவினர் செயல்பட்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி கேடயம் வழங்கினார். மாநில அளவில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஸ்ரீநிதி அபிராமி, ஸ்ரீநிதி மாளவிகா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய முன்னாள் தலைவர் கோவனூர் துரைசாமி, கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், கவிச்சந்திர மோகன், சிடெக் கம்ப்யூட்டர் மைய நிர்வாகி ரமேஷ், இணைந்த கரங்கள் அமைப்பு நிர்வாகி ஜோஸ்வா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேகர் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us