Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஓட்டுச்சாவடி லிஸ்ட்: 14க்குள் வெளியீடு

ஓட்டுச்சாவடி லிஸ்ட்: 14க்குள் வெளியீடு

ஓட்டுச்சாவடி லிஸ்ட்: 14க்குள் வெளியீடு

ஓட்டுச்சாவடி லிஸ்ட்: 14க்குள் வெளியீடு

ADDED : செப் 07, 2011 12:45 AM


Google News
திருப்பூர் : வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் குறித்து இன்று நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சியுடன் வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகள், தொட்டிபாளையம், செட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், ஆண்டிபாளையம் ஆகிய எட்டு ஊராட்சிகள் சேர்க்கப்பட்டு, 60 வார்டுகளாக விரிவாக்கம் செய்து, இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 659 ஆண்கள், ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 629 பெண்கள், 12 திருநங்கைகள் என 4 லட்சத்து 8 ஆயிரத்து 300 வாக்காளர்கள் உள்ளனர். 60 வார்டுகளுக்கு 424 ஓட்டுச்சாவடிகள் 144 பள்ளிகளில் அமைத்தல் குறித்து வரைவு ஓட்டுச்சாவடிகளின் உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வார்டு எல்லைகள் நிர்ணயித்து வழங்கப்பட்டுள்ள அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இவை குறித்து இன்று நடக்கும் மாநகராட்சி அவசர கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.ஓட்டுச்சாவடி பட்டியல் மற்றும் வாக்காளர் பட்டியல் இறுதி செய்து அனுப்ப, மாநில தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. ஓட்டுச்சாவடி பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று இறுதி செய்து, இறுதி பட்டியலை வரும் 12க்குள் வெளியிட வேண்டும். 14க்குள் இறுதி பட்டியலை வினியோகிக்க வேண்டும். அதேபோல், வாக்காளர் பட்டியலை வரைவு பிரதிகளை 10க்குள் இறுதி செய்து, அச்சு பணிகளை முடித்து, 14க்குள் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us