ADDED : செப் 07, 2011 12:49 AM
ஊட்டி : சி.எஸ்.ஐ.,ஹோபார்ட் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் சாந்தகுமார் வரவேற்றார். முன்னாள் லயன் சங்க தலைவர் பால்சந்த் உட்பட லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பேசினர். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை ஜெசிரோஸ்லின் நன்றி கூறினார்.


