/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி அருகே போலீஸ் மாயம்5 தனிப்படைகள் அமைத்து விசாரணைதூத்துக்குடி அருகே போலீஸ் மாயம்5 தனிப்படைகள் அமைத்து விசாரணை
தூத்துக்குடி அருகே போலீஸ் மாயம்5 தனிப்படைகள் அமைத்து விசாரணை
தூத்துக்குடி அருகே போலீஸ் மாயம்5 தனிப்படைகள் அமைத்து விசாரணை
தூத்துக்குடி அருகே போலீஸ் மாயம்5 தனிப்படைகள் அமைத்து விசாரணை
ADDED : செப் 07, 2011 02:28 AM
தூத்துக்குடி: காவல்துறையில் போலீசாக வேலைபார்த்து வரும் எனது மகன் தற்கொலை
செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். ஆகவே எனது மகனை உயிருடன்
மீட்டுத்தாருங்கள் என தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். காணாமல்போன
போலீசை மீட்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை நாகர்கோவில்
சென்று விசாரணை நடத்தியது.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே மேலக்கூட்டுடன்காடு நடுத்தெருவை
சேர்ந்தவர் வள்ளிநாயகம் இவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு
பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வள்ளிநாயகம் இறந்துவிட்டதாக
கூறப்படுகிறது. இவருக்கு 5 மகன்கள் உள்ளனர். இதில் மாரிமுத்து(26) ஒருவர்
ஆவார். மாரிமுத்து சென்னை மாநகரில் போலீசாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு
கடந்த 25ம் தேதி தூத்துக்குடிக்கு பணிமாறுதல்உத்தரவு வந்தது. இதனையடுத்து
அங்கிருந்து அவர் பணி மாறுதல் ஆர்டருடன் சொந்த ஊரான மேல கூட்டுடன்காடு
கிராமத்திற்கு வந்தார். அங்கு அவர் சகோதரர் திருமணம் கடந்த 31ம் தேதி
நடந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்த இரவு மாரிமுத்து அவரது சகோதரர்,
உறவினர் என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர்.
அதில் அவர்களுக்குள்
சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டில் உள்ளவர்கள்
படுக்க சென்றுவிட்டனர். சம்பவத்தன்று இரவு மாரிமுத்து வீட்டை விட்டு வெளியே
சென்று விட்டார். பின்னர் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால்
குடும்பத்தில் உள்ளவர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் மாரிமுத்து
குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதற்கிடையே அவரது வீட்டில் மாரிமுத்து
எழுதிய ஒரு கடிதம் ஒன்று சிக்கியது. அதில் போலீசில் பணிபுரிந்து வந்ததற்கு
பெருமைப்படுகிறேன். நான் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளேன். ஆகவே என்னை
யாரும் தேடவேண்டாம். இது எனது வாக்குமூலமாகும் என தெரிவிக்கிறேன். இதனைக்
கண்ட தாய் வள்ளியம்மாள் அதிர்ச்சியடைந்தார். இதனால் பதறிப்போன அவர்
புதுக்கோட்டை போலீசில் புகார் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன்
விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக போலீஸ் துறையை
சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
நெல்லை சரக டிஐஜி., விசாரணைஇதனையடுத்து நெல்லை சரக டிஐஜி.,(பொறுப்பு)
வரதராஜூ , தூத்துக்குடி எஸ்.பி., நரேந்திரநாயர் ஆகியோர் புதுக்கோட்டை
போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று வந்தனர். இவர்கள் இருவரும் கைப்பற்றிய லெட்டர்
குறித்து விசாரணை நடத்தினர். இவர் கைப்பட எழுதிய லெட்டர்தானா? அவர் ஏற்கனவே
எழுதிய கையெழுத்து எப்படி இருக்கும் என்பது குறித்து விசாரணை நடத்த
உத்தரவிட்டனர்.காணாமல்போன மாரிமுத்துவை மீட்பதற்கு புதுக்கோட்டை
இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை பல்வேறு இடங்களில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல்போன
மாரிமுத்து நாகர்கோவிலில் இருக்கலாம் என ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தனிப்படை போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த
சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


