Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டி

ADDED : செப் 07, 2011 10:20 PM


Google News
விழுப்புரம்:உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட் டியிடும் என்று மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி பேசினார்.விழுப்புரத்தில் நடந்த ம.தி.மு.க., மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் மாநில பொருளாளர் டாக்டர் மாசி லாமணி பேசியதாவது:தமிழகத்தில் வரும் உள் ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங் களில் மட்டும் ம.தி.மு.க., போட் டியிடும். உள் ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, வசதி வாய்ப்புகள் மூலமே வெற்றிகள் கிடைக்கும்.

இன்றைய சூழலில் ம.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிடும். ஒத்த கருத்துகளையுடைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவும் வாய்ப்பு உள் ளது. அடுத்து நடக்கும் சட்டசபை தேர்தல் தான் ம.தி.மு.க.,வின் இலக்கு.அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளிலும் கூட்டணி பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தி.மு.க.,விற்கு அக்கட்சியினரை காப்பாற்றவே நேரம் போதவில்லை. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை ஆளுங்கட்சிகளை சார்ந்தவர்கள் தான் வெற்றி பெறும் மரபு உள்ளது. இன்று மக்களின் அனைத்து வகையான பாது காப்பிற்கும் ம.தி.மு. க., தான் முன்னின்று போரா டுகிறது. வைகோ.,வின் அழைப்பை ஏற்று வழக்கறிஞர் ராம்ஜெத்மானி கோர்ட்டில் ஆஜரானார்.ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வைகோ., தான் முதலில் கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து பிரிட்டன், அமெரிக்க போன்ற நாடுகள் இலங்கை அரசுக்கு பொருளாதார தடைகளை விதிக்க துவங்கியது. வைகோ.,வின் கோரிக்கையை ஏற்றே சட்டசபையில் முதல்வர் ஜெ., தீர்மானம் நிறைவேற்றினார். தற்போது ம.தி.மு.க., தான் திராவிட கழகத்தின் மறு பதிப்பாக உள்ளது.கடந்த 3 மாதங்களுக்கு முன் அன்னா ஹசாரே யார் என்று தெரியாது. தற்போது பிரதமர் பதவிக்கு நேரடி தேர்தல் நடந்தால் அன்னா ஹசாரே பிரதமராக வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் ம.தி.மு.க., விற்கும் திருப்பு முனை வரும். உழைத்த உழைப்பு, விதைத்த விதையும் முளைத்தே தீரும்.இவ்வாறு டாக்டர் மாசிலாமணி பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us