Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விருதுநகரில் பதட்ட நிலையாம் குழப்பம் ஏற்படுத்தும் எம்.எல்.ஏ.,

விருதுநகரில் பதட்ட நிலையாம் குழப்பம் ஏற்படுத்தும் எம்.எல்.ஏ.,

விருதுநகரில் பதட்ட நிலையாம் குழப்பம் ஏற்படுத்தும் எம்.எல்.ஏ.,

விருதுநகரில் பதட்ட நிலையாம் குழப்பம் ஏற்படுத்தும் எம்.எல்.ஏ.,

ADDED : செப் 07, 2011 11:01 PM


Google News

விருதுநகர் : விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டுக்கு அனைத்து பஸ்களும் வந்து செல்வதால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ள நிலையில்,இதில் குழப்பம் ஏற்படுத்தும் பாண்டிராஜன் எம்.எல்.ஏ.,க்கு மக்களிடையே எதிர்ப்பு உருவாகி உள்ளது.விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் நெருக்கடியில் தவிக்கிறது.

இதற்கு மாற்றாக ரூ.பல கோடி செலவில் கட்டப்பட்ட புதுபஸ் ஸ்டாண்ட், 20 ஆண்டுகளாக செயல்படாமல் சுய நலவாதிகளால் முடங்கியது.'தினமலர்' செய்தி எதிரொலியாக கலெக்டர் பாலாஜி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்பயனாக புது பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. விருதுநகர் வராது, பைபாஸ் ரோட்டில் சென்ற அனைத்து பஸ்களும் தற்போது புது பஸ்ஸ்டாண்ட் வந்து செல்கின்றன. இதனால் மகிழ்ச்சியுற்ற பொதுமக்களும், எந்த இடையூறு இல்லாமல் தொலை தூர பஸ்களுக்காக புதிய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றனர். விருதுபட்டியை விருதுநகராக்கும் திட்டத்திற்கு சுய நலவாதிகள் சிலர் இன்றும் முட்டுக்கட்டை போடுகின்றனர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும் சுய நலவாதிகளின் பிடியில் சிக்கி, தங்களது தொலைநோக்கு சிந்தனையை மறந்து, குறுகிய மனப்பான்மையுடன் நடப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. 95 சதவீத மக்கள் உணர்வுக்கு மதிப்பு அளிக்காமல் , சுயநலவாதிகளுக்காக பஸ் ஸ்டாண்ட் பிரச்னையை கையில் எடுத்துள்ள பாண்டியராஜன் எம்.எம்.ஏ.,விருதுநகரில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளார்.இது மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பலரின் ஆதங்கம்:வள்ளிக்குட்டி ராஜா(நகராட்சி கவுன்சிலர்): விருதுநகர் ஊர் பெயரை சொன்னாலே மதுரை மாட்டுத்தாவணி, திருநெல்வேலியில் பஸ்களில் மக்களை ஏற்றாத நிலை இருந்தது. புதிய பஸ் ஸ்டாண்ட் துவக்கியதிலிருந்து, பைபாஸ் ரைடர், நெடுஞ்சாலை எக்ஸ்பிரஸ், பாய்ண்ட் டூபாய்ண்ட் பஸ்கள் கூட நகருக்குள் வந்து செல்கின்றன. பழைய பஸ் ஸ்டாண்டால் நெருக்கடி ஏற்பட்டு பலரும் விபத்துக்குள்ளாகின்றனர். புது பஸ்ஸ்டாண்ட் செயல்பாடால் தற்போது ரோடுகளில் நெரிசல் குறைந்துள்ளது. மக்களுக்கும் புது பஸ்ஸ்டாண்ட் சென்றால், வெளியூர்களுக்கு எளிதில் செல்லலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் பழைய பஸ் ஸ்டாண்டில் நெருக்கடி இன்னும் குறையவில்லை. இதை தவிர்க்க இங்கிருந்து புறப்படும் அனைத்து பஸ்களையும் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றம் செய்ய வேண்டும். 95 சதவீத மக்களின் நலனை எம்.எல்.ஏ., சிந்திக்க வேண்டும்.



செ.காமாட்சி: விருதுநகர் விரிவாக்கம் ஆவதற்கும் வளர்ச்சியடைவதற்கும் புது பஸ் ஸ்டாண்ட் செயல்படுவதுதான் நல்ல முயற்சி. இது தொடர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் எம்.எல்.ஏ., தெரிவித்திருப்பது போல், விருதுநகரில் பதட்டமான நிலை எங்கும் இல்லை. மக்கள் அமைதியாக பஸ் ஏறி செல்கின்றனர். புது பஸ் ஸ்டாண்ட் செயல்படுவதால், எம்.எல்.ஏ., தான் பதட்டமாக இருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ஒரு எம்.எல்.ஏ., இது போன்று தெரிவித்திருப்பது அபத்தமாக இருக்கிறது. அமைதியாக இருக்கும் மக்களை தூண்டிவிடுவது போல் அவர் செயல் உள்ளது. விருதுநகர் வளர்ச்சிக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் தொடர்ந்து செயல்பட வேண்டும். பழைய பஸ்ஸ்டாண்ட் செயல்பாட்டை படிபடியாக குறைக்க வேண்டும்.ரத்தினவேல்(நகர் நல அமைப்பு): புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எம்.ஜி.ஆர்., சிலை, ஆத்து பாலம் பஸ் ஸ்டாப்புகளை அகற்ற வேண்டும். புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து தான் அனைத்து பயணிகளும் பஸ் ஏற வேண்டும். தொலைதூர பஸ்களில் பயணம் செய்பவர்கள் ,விருதுநகருக்குள் மூன்று பஸ் ஸ்டாப்புகள் என்றால் எரிச்சலடைவார்கள். இதனால் பஸ்கள் நகருக்குள் வராமல் நான்கு வழிச்சாலையில் செல்வதற்கு வாய்ப்புள்ளது.

தற்போது தான் விருதுநகர் என்றால் பஸ்களில் பயணிகளை ஏற அனுமதிக்கின்றனர். இதற்கு 95 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது. எம்.எல்.ஏ.,செயல்வேதனை அளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us