/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பெண் இன்ஜினியர் கடத்தல் கடையநல்லூரில் பரபரப்புபெண் இன்ஜினியர் கடத்தல் கடையநல்லூரில் பரபரப்பு
பெண் இன்ஜினியர் கடத்தல் கடையநல்லூரில் பரபரப்பு
பெண் இன்ஜினியர் கடத்தல் கடையநல்லூரில் பரபரப்பு
பெண் இன்ஜினியர் கடத்தல் கடையநல்லூரில் பரபரப்பு
ADDED : செப் 08, 2011 01:06 AM
கடையநல்லூர் : கடையநல்லூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் இன்ஜினியர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடையநல்லூர் மேற்குமலம்பாடு தென்வடல் தெருவை சேர்ந்த சாகுல்ஹமீது மகள் சுஜிதா(22). பி.இ., பட்டதாரியான சுஜிதாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையில் கடந்த 5ம் தேதி பிரவுசிங் சென்டருக்கு செல்வதாக கூறி, வீட்டிலிருந்து சென்ற சுஜிதா திடீரென மாயமானார். சுமார் 60 கிராம் நகையுடன் காணாமல் போன சுஜிதாவை அவரது தந்தை சாகுல்ஹமீது பல இடங்களில் தேடியதாக தெரிகிறது. இந்நிலையில் கிருஷ்ணாபுரம் நடுத்தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் இந்திரகுமார்(24) சுஜிதாவை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாகுல்ஹமீது கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


