Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/எங்களிடம் காசும் இல்லை... நெஞ்சில் மாசும் இல்லை... ம.தி.மு.க., மாநாடு திருப்புமுனை ஏற்படுத்தும்

எங்களிடம் காசும் இல்லை... நெஞ்சில் மாசும் இல்லை... ம.தி.மு.க., மாநாடு திருப்புமுனை ஏற்படுத்தும்

எங்களிடம் காசும் இல்லை... நெஞ்சில் மாசும் இல்லை... ம.தி.மு.க., மாநாடு திருப்புமுனை ஏற்படுத்தும்

எங்களிடம் காசும் இல்லை... நெஞ்சில் மாசும் இல்லை... ம.தி.மு.க., மாநாடு திருப்புமுனை ஏற்படுத்தும்

ADDED : செப் 08, 2011 01:06 AM


Google News

திருநெல்வேலி : நெல்லையில் நடைபெறவுள்ள மதிமுக திறந்த வெளிமாநாடு கட்சிக்கு திருப்புமுனையாக அமையும் என பொதுசெயலாளர் வைகோ நிருபர்களிடம் தெரிவித்தார்.

நெல்லையில் செப்.15ல் நடைபெறவுள்ள மதிமுக திறந்த வெளி மாநாட்டு தொடர்பான ஆலோசனை கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகள் நிதி வழங்கும் கூட்டம் ஜங்ஷனில் நடந்தது. கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிளுக்கு ஆலோசனைகளை வழங்கியதோடு, நெல்லை புறநகர், நெல்லை மாநகர், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூராட்சி கட்சி நிர்வாகளிடம் மாநாட்டு நிதியை பெற்றார். இந்த கூட்டத்தில் மதிமுக துணை பொது செயலாளர் நாசரேத் துரை, மாவட்ட புறநகர் செயலாளர் சரவணன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள், மாநில மாணவர் அணி செயலளார் ராஜேந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் கல்லத்தியான், முன்னாள் எம்எல்ஏ., சதன் திருமலைக்குமார், மாவட்ட துணை செயலாளர் மின்னல் முகம்மது அலி மற்றும் 3 மாவட்ட நகர, ஒன்றிய மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இதனையடுத்து மதிமுக பொது செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது; தியாக வரலாறு, பண்பாடு நெறிக்கு புகழ்பெற்ற நெல்லையில் அண்ணாதுரையின் 103வது பிறந்த நாளான செப்.15ம்தேதி மதிமுக மாநாடாக நடத்துகிறது. இயக்க வரலாற்றில் பெரும் உந்துதலாக இந்த மாநாடு அமையும். காலச்சூழல் மாற்றம் காரணமாக நடுநிலையாளர்கள், தமிழ் மக்களின் கவனம் மதிமுக மீது திரும்பியுள்ளது. ஹசாரேவின் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு பெருகிய போல், ஊழலற்ற அரசியலை மக்கள் விரும்புகின்றனர். அண்ணாதுரை வளர்த்த கொள்கைகளை, அவரது புகழை சொல்லி நாங்கள் கடமையை செய்கிறோம். இதற்கு கடந்த கால நிகழ்வுகள் ஆதாரமாகும். கடந்த 1994ம் ஆண்டில் கட்சி துவங்கியபோது ஆயிரத்து 600 கிமீ நடைபயணம் மேற்கொண்டேன். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுபோல் கடந்த 1998ல் மதிமுக மறுமலர்ச்சி பேரணி சென்னையில் நடந்தது. அண்ணாதுரை நூற்றாண்டு விழாவான கடந்த 2008ம் ஆண்டில் மதுரையில் மாநாடு நடத்தினோம். நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சியில் மாநாடு நடத்தினோம். கடந்த ஆண்டு அண்ணா துரை பிறந்த நாளை மதிமுக எழுச்சி மாநாடாக நடத்தியது. இந்த ஆண்டு அவரது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லையில் திறந்த வெளி மாநாடு நடத்துகிறோம். இந்த மாநாட்டிற்கு மதிமுக நாஞ்சில் சம்பத் தலைமை வகிக்கிறார். இமயம் ஜெபராஜ் மாநாட்டு திடலை திறந்துவைக்கிறார். மாநாட்டு தீப சுடரை மாவட்ட செயலாளர் சரவணன் ஏற்றி வைக்கிறார். மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள் வரவேற்கிறார். அண்ணாதுரை படத்தை உயர்நிலை குழு உறுபினர் ரத்தினராஜ் திறந்துவைக்கிறார். அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் நிஜாம், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆர்எம்எஸ்., முன்னிலை வகிக்கின்றனர். மாநாட்டு பந்தலுக்கு ஈத்தாமொழி திரவியம் பெயரும், 3பேர் தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி உயிர் தியாகம் செய்த செங்கோடியின் பெயர் மாநாட்டு வளாகத்திற்கும் சூட்டப்படும். இந்த திறந்த வெளி மாநாட்டில் லட்சகணக்கானோர் பங்கேற்கவுள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் மதிமுக போட்டியிடாததால், மக்களின் கவனம் மதிமுக மீது திரும்பியுள்ளது. இந்த இடைப்பட்ட 4மாத காலத்தில் மதிமுகவினர் கடுமையாக உழைத்தனர். இதில் ஈழத் தமிழர் பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை உட்பட தமிழக மக்களின் நலனுக்காக போராட்டங்களை நடத்தியுள்ளது. இதனால் தற்போது மதிமுகவின் மீது மக்கள் அலைவீசுகிறது. ஈழத் தமிழர் பிரச்னை குறித்து சிடி தயாரித்து தமிழக மக்கள்,இளைஞர்களிடம் சேர்த்துள்ளோம். இது தவிர அதே சிடியை ஆங்கிலத்தில் தயாரித்து டெல்லியில் கடந்த ஆக.3ம்தேதி 5 ஆயிரம் டிவிடிக்கள் வெளியிடப்பட்டது. இந்த டிவிடியை மதிமுக எம்பி., கணேசமூர்த்தி மூலம் 139 தூதரங்களுக்கு நேரில் சென்று வழங்கினர். இதனை பெற்ற தூதரக அதிகாரிகள் எம்பிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். சில தூதரக அதிகாரிகள் மேலும் டிவிடிக்கள் கேட்டு கடிதம் எழுதியுள்ளனர். இந்த டிவிடியில் ராஜபக்சே ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த டிவிடியை பார்த்த சரத் யாதவ் உட்பட சில எம்பிக்கள் பார்லி.,யில் விவாதம் நடத்தியுள்ளனர். இலங்கை பிரச்னைக்கு தனி ஈழம் தான் தீர்வு. இதுகுறித்துமக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மதிமுக கடந்த 4மாத காலமாக தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் பாடுபட்டு வருகிறது. மூன்று தமிழர்களின் தூக்குதண்டனையை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முதல்வருக்கு கோரிக்கை விடுத்தேன். இந்த அணுகுமுறையை எனது கட்சியினரும், மக்களும் வரவேற்றனர். முதல்வரும் 3பேரின் தூக்கு தண்டனை தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும். இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்றும். தமிழக உள்ளாட்சிதேர்தலில் மதிமுக போட்டியிடவுள்ளது. எங்களிடம் காசும், நெஞ்சில் மாசும் இல்லாததால், எங்களை யாரும் குறை சொல்ல முடியாது. மதிமுக பல்வேறு மாநாடு மற்றும் பேரணிகளை நடத்தியுள்ளது. அதுபோல் நெல்லையில் நடைபெறவுள்ள திறந்தவெளி மாநாடு கட்சிக்கு திருப்புமுனையாக அமையும். மக்கள் எங்கள் பக்கம் திரும்புவார்கள். டெல்லி ஐகோர்ட் நுழைவு வாயிலில் குண்டு வெடிப்பு சம்பவம் கடும் கண்டனத்திற்குரியதாகும்.

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us