ADDED : செப் 08, 2011 01:29 AM
கூடலூர் : 'கல்லூரி முதல்வரை மாற்ற கூடாது,' என வலியுறுத்தி மூன்றாவது நாளாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
கூடலூர் பாரதியார் பல்கலை கழக அறிவியல் கலை கல்லூரியில் முதல்வராக அசோகன் 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரால் கல்லூரியில் அனைத்து துறைகளும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இவரை இடமாற்றம் செய்ய உத்தரவு வந்துள்ளது.'கல்லூரி முதல்வரின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்,' என வலியுறுத்தி, கடந்த 5ம் தேதி முதல் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இடமாற்ற உத்தரவை வழங்க வந்த கோவை பாரதியார் பல்கலைகழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களை மாணவர்கள் முற்றுகையிட்டதால், அவர்கள் திரும்பி சென்றனர். நேற்று மூன்றாவது நாளாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் குறித்து கலெக்டரின் உத்தரவுப்படி டி.ஆர்.ஓ., (ஜென்ம நிலம்) நாகராஜன் கல்லூரிக்கு வந்து முதல்வர், மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களிடம் விசாரணை நடத்தினார். 'கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்,' என மாணவர்கள் தெரிவித்தனர்.


