/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இந்திய - தைவான் கூட்டு கணித மாநாடுஇந்திய - தைவான் கூட்டு கணித மாநாடு
இந்திய - தைவான் கூட்டு கணித மாநாடு
இந்திய - தைவான் கூட்டு கணித மாநாடு
இந்திய - தைவான் கூட்டு கணித மாநாடு
ADDED : செப் 08, 2011 01:52 AM
கோவை : இரண்டாவது இந்திய - தைவான் கூட்டு கணித மாநாடு, எட்டிமடையில் உள்ள அமிர்தா பல்கலையில் இன்று துவங்கி வரும் 11ம் தேதி வரை நடக்கிறது.அமிர்தா பல்கலை அறிக்கை:இந்திய - தைவான் கூட்டு கணித மாநாடு பல்கலையில் இன்று காலை 9.15 மணிக்கு துவங்குகிறது.
வரும் 11ம் தேதி வரை நடக்கும் இம்மாநாட்டில், இருபதுக்கும் மேற்பட்ட தைவான் பேராசிரியர்களும், ஐம்பதுக்கும் மேற்பட்ட இந்திய பேராசிரியர்களும் பங்கேற்று ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர்.இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் மற்றும் இந்திய அணு சக்தி துறை உள்ளிட்ட அமைப்புகள் இந்த மாநாட்டுக்கு நிதி வழங்கி வருகின்றன. முதல் மாநாடு தைவானில் கடந்த 2009ல் நடந்தது. இரண்டாவது மாநாட்டை தற்போது பல்கலை கணிதத்துறை நடத்துகிறது. மாநாட்டின் நிறைவில் இருநாடுகளின் கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள் வெளியிடப்படுகிறது. இவை இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.


