Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண் தானம் செய்ய வேண்டும்: டாக்டர்கள் தகவல்

இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண் தானம் செய்ய வேண்டும்: டாக்டர்கள் தகவல்

இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண் தானம் செய்ய வேண்டும்: டாக்டர்கள் தகவல்

இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண் தானம் செய்ய வேண்டும்: டாக்டர்கள் தகவல்

ADDED : செப் 08, 2011 02:05 AM


Google News

பொள்ளாச்சி : 'இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண் தானம் செய்ய வேண்டும்' என்று தேசிய கண் தான தினத்தையொட்டி அரசு மருத்துவமனை டாக்டர் திருமங்கை கூறினார்.

இன்று தேசிய கண் தான தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனை உதவி கண் டாக்டர் திருமங்கை கூறியதாவது: மனிதனின் வாழ்க்கையில் கண் தானம் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இறந்த பின் மண்ணுக்கு வீணாக போகும் கண்ணை மற்றவர்களுக்கு தானம் செய்யலாம். கண் தானம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த பிறகு அவர்கள் இறக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் கண் தான வங்கியை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் போது கண் தானம் செய்ய விரும்பும் நபர் மற்றும் அவரது நெருங்கிய சொந்தத்தில் இருக்கும் ஒருவர் கையொப்பம் இட வேண்டும். இறந்த ஆறு மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்கப்பட்டால், மருத்துவர்களால் கண் பெற்று கொள்ளப்படும். இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண் எடுக்கப்பட்டு பின் அதனை தகுந்த தட்பவெப்ப நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும். ஆறு மணி நேரத்திற்குள் கண் எடுக்கப்படாவிட்டால் கண்களில் உள்ள செல்களின் எண்ணிக்கை குறைந்து விட வாய்ப்புகள் உள்ளது. கண் தானம் செய்வோர்களுக்கு மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், மலேரியா, போன்ற நோய்கள் இருந்தால், கண் தானம் செய்ய முடியாது. கண் தானம் செய்வோர்களின் இறப்பு மருத்துவமனைகளில் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். விஷம் அருந்துதல் போன்ற தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு இறந்தவர்களின் கண்கள் தானம் செய்ய தகுதியற்றவை ஆகிவிடும். ஒரு வயதுக்கு மேற்பட்டவர்களும், 70 வயதுக்குட்பட்டவர்களும் கண் தானம் செய்யலாம். கண் தானம் பெறுபவர்களும் மருத்துவமனைகளில் பதிவு செய்வது அவசியம். கண் தானம் வழங்குபவர்கள் பதிவு செய்யும் போது ஏமாறாமல் கவனமாக பதிவு செய்ய வேண்டும், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us