Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/எல்.ஆர்.ஜி., கல்லூரியில் பேரவை துவக்கம்

எல்.ஆர்.ஜி., கல்லூரியில் பேரவை துவக்கம்

எல்.ஆர்.ஜி., கல்லூரியில் பேரவை துவக்கம்

எல்.ஆர்.ஜி., கல்லூரியில் பேரவை துவக்கம்

ADDED : செப் 08, 2011 02:16 AM


Google News

திருப்பூர் : திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பேரவை துவக்க விழா நேற்று நடந்தது.

கல்லூரி முதல்வர் (பொ) உஷா வரவேற்றார். திருப்பூர் கபடி மற்றும் கல்வி அறக்கட்டளை சேர்மன் சுப்ரமணியம் தலைமை வகித்தார்.பேரவை உறுப்பினர்களை பொறுப்பாசிரியர் வேதநாயகி அறிமுகம் செய்து வைத்தார். பேரவை தலைவியாக மாணவி வினோதினி, துணை தலைவியாக ஆஷா பர்வீன், செயலாளராக நித்யா, பொருளாளராக வித்யா, விளையாட்டு துறை தலைவியாக தமிழரசி, பொருளியல் மன்ற தலைவியாக நந்தினி, தமிழ் மன்ற தலைவியாக ரோஸ்லின் ஜெயமேரி உள்ளிட்டோர் பதவியேற்றனர்.திருப்பூர் கபடி மற்றும் கல்வி அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், துணை தலைவர் ராமதாஸ், பேராசிரியர்கள், மாணவியர்பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us