Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மடத்துக்குளத்தில் அடிப்படை சுகாதாரம் மேம்படுத்தப்படுமா? கிராம ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தல்

மடத்துக்குளத்தில் அடிப்படை சுகாதாரம் மேம்படுத்தப்படுமா? கிராம ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தல்

மடத்துக்குளத்தில் அடிப்படை சுகாதாரம் மேம்படுத்தப்படுமா? கிராம ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தல்

மடத்துக்குளத்தில் அடிப்படை சுகாதாரம் மேம்படுத்தப்படுமா? கிராம ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தல்

ADDED : செப் 08, 2011 10:07 PM


Google News
மடத்துக்குளம் : மடத்துக்குளம் பகுதியில் அடிப்படை சுகாதாரம், இதர கட்டமைப்பு வசதிகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் இருப்பதால் மழைக்காலங்களில் 70க்கும் அதிகமான கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன.

இப்பகுதியில் உள்ள ரோடுகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 11 ஊராட்சிகளும், நான்கு பேரூராட்சிகளும் உள்ளன. இப்பகுதியில் அடிப்படை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மற்றும் போதிய வசதிகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படவில்லை. பரிதாப ரோடுகள்: ஒன்றியத்துக்குட்பட்ட பல ரோடுகள் கற்கள் பெயர்ந்து சேறும், சகதியுமாக காணப்படுகிறது. பல இடங்களில் குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த ரோடு பகுதிகளை மக்கள் திறந்த வெளிக்கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. கணியூரில் இருந்து கடத்தூர் செல்லும் மூன்று கி.மீ., ரோடு பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. அரிய நாச்சிபாளையம் -ஜோத்தம்பட்டி இணைப்பு ரோடு, மெட்ராத்தி-ராமலிங்காபுரம் ரோடுகள் நோய் பரப்பும் பகுதியாக மாறியுள்ளது. கிராம இணைப்பு ரோடுகளை பராமரிக்கும் பணி தேக்கமடைந்துள்ளது. இந்த ரோடுகளில் மழைகாலங்களில் போக்குவரத்து துண்டிக்கும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீருடன் கலக்கும் சாக்கடைகள்: மடத்துக்குளம் பகுதியில் பெரும்பான்மையான இடங்களில் சாக்கடை நீருடன் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி தலமாகவும், நோய் பரப்பும் இடமாகவும் காட்சியளிக்கிறது. சாக்கடை நீர் குடிநீர் ஆதாரங்களுடன் கலந்து பொதுமக்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. சாக்கடை நீர் வெளியேற முறையாக வடிகால் இல்லாததால் தெருக்களில் சாக்கடை கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்து மக்கள் வேதனையடைந்துள்ளனர். காரத்தொழுவு அக்ரஹாரம் பகுதி, கணியூர் வெங்கிட கிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி அருகில், மடத்துக்குளம் சுந்தரராமய்யர் லே அவுட், பெரிய வட்டாரம், குமரலிங்கம் நுழைவு வாயில் பகுதி, ஆரம்ப சுகாதாரநிலையம், கொழுமம் ஆற்றுபகுதி மற்றும் குதிரையாற்று நீர் கலக்குமிடங்களில் முறையாக சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்களுக்கு நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கணியூர், துங்காவி, பாப்பான்குளம், குமரலிங்கம், மடத்துக்குளம் ஆகிய இடங்களில் செயல்படும் மையங்களில் மருத்துவர்கள், டெக்னீசியன்கள், செவிலியர்கள்,மருத்துவ உதவியாளர்கள், மற்றும் படுக்கை, ஆய்வக வசதிகள் குறைவாக இருப்பதால் மழைக்காலங்களில் சிகிச்சைக்கு வரும் மக்கள் சிரமப்பட வேண்டியதுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us