Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கவரிங் நகை கொடுத்து

கவரிங் நகை கொடுத்து

கவரிங் நகை கொடுத்து

கவரிங் நகை கொடுத்து

ADDED : செப் 10, 2011 03:05 AM


Google News
மோசடி: இருவர் கைதுநங்கவள்ளி: முத்தூட் பைனான்ஸில் கவரிங் நகை கொடுத்து, மோசடி செய்த இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

தாரமங்கலம் அருகேயுள்ள பவளத்தானூர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் சண்முகம் (50). இவரது நண்பர் சின்னாம்பட்டியை சேர்ந்த ஜேசுதாஸ் (48). இருவரும் நேற்று மாலை, தாரமங்கலத்தில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்துக்கு சென்று, நகை கொண்டு வந்துள்ளோம், பணம் வேண்டும் எனக்கூறி, ஆறரை பவுன் தங்க நகையை பைனான்ஸில் கொடுத்தனர். நகையை சோதனை செய்து பார்த்த போது, அது கவரிங் நகை என, கண்டுபிடிக்கப்பட்டது. முத்தூட் பைனான்ஸின் மேலாளர் நவாத், போலீஸுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கவரிங் நகை கொடுத்து, பணத்தை பெற முயன்ற சண்முகம், ஜேசுதாஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us